Motivational stories in Tamil – Motivational siru kathaigal
Read a lot of motivational stories in Tamil language. Tamil Motivational stories are many in number because Tamil Nadu has a great history, culture and people capable of performing great feats in order to achieve their end goals. In this blog, we are going to go through many motivational siru kathaigal or motivational stories in Tamil to boost our moral and to strive to be successful no matter what!
Positive thinking motivational stories in Tamil
Why should one read positive thinking stories in Tamil? Positive thinking motivational stories in Tamil will make you think and act positively and will push you towards the path of success. Imagine if you try to do something thinking you will fail. Then you will definitely fail. If you have a positive thinking attitude and if you are motivated, you will definitely succeed. TAMILAN DAAAWWW!!!! If you read these motivational stories in Tamil, you will definitely become more positive and succeed in life!
List of motivational stories in Tamil
- பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி போடுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்!
- நல்ல வாத்தியார் யார் தெரியுமா?
- நல்லா யோசிச்சு சொல்லுங்க… எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா?
- “ஏ” சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் “பி” தான் ஜெயிக்கும்!
- நான் முழுமை அல்ல… ஆனால் நான் நானாக இருக்கிறேன்!
- தங்க இறகுகள் கொண்ட அன்னப்பறவை – A motivational story in Tamil
- Motivational Story in Tamil about the life of the great Tamil actor Surya
- தோல்வியும் வெற்றி தான்!
- எறும்பு மற்றும் வெட்டுக்கிளி!
- ராஜாவும் சிலந்தியும்
- ஆபிரகாம் லிங்கனின் கதை
- மல்லிகாவின் வெற்றிக் கதை
motivational stories in Tamil – பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி போடுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்!
The first among the motivational stories in Tamil is a story about the power of positive thinking. It gives you advice about how you should not be afraid of anything and completely believe in yourself. Only then you can succeed! You should not fear failure and you should strive towards success! You should not fear about putting effort and should jump into action! Read this motivational story in Tamil and inculcate positive thinking!
சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சிலர் இது நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம் தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம் தாங்க. எதற்கும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த பயமும் இருக்காது. தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். பயப்படுவதால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியாது. துணிந்து செய்யுங்கள் உங்கள் செயல்களை. வெற்றி உங்கள் வசம் தான்.
முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம்.
ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்தில் அவனையே அழித்து விடும். ஒருவனுடைய தயக்கம் அவனை வளர விடாமல் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தயங்காமல் செய்து முடித்து வெற்றி வாகை சூடுங்கள்.
பயமும் தயக்கமும் இருந்தால் எந்த செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் செயல்களைத் தொடங்குங்கள். பயத்தை தூக்கியெறியுங்கள். வெற்றி வேண்டுமா அப்போ பயத்துக்கும் தயக்கத்துக்கும் குட் பை சொல்லுங்க.
More siruvar kathaigal for kids
LINKS |
Short panchathanthira kathaigal in Tamil |
Short Moral stories in Tamil for kids |
Comedy stories and Fairy tale stories in Tamil |
Tenali raman kathaigal |
Motivational stories in Tamil – நல்ல வாத்தியார் யார் தெரியுமா?
The second motivational story in Tamil is a story about the power of a teacher and who is a good teacher. A good teacher is completely responsible for making good students and is the cause for making a student successful! A great teacher considers it as his duty to guide the student to ensure that the student has a positive attitude and achieves greatness. Read this motivational story in Tamil about how a teacher brings motivation to a student!
நமக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் அனைவருமே ஆசிரியர்கள்தான்.. ஆனால் அதில் நல்ல ஆசிரியர் யார் தெரியுமா…!
எங்கே பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். என்னெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தரக் கூடாது.. பார்க்க கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆசிரியரின் கடமை.. எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுப்பது அந்த மாணவனின் உரிமை.. அப்படிக் கற்றுக் கொடுப்பவர்தான் நல்ல ஆசிரியர்.
நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது. அவர் தான் வெளியுலகத்தில் என்ன என்ன இருக்கிறது அதன் அம்சங்கள் என்ன அது நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று கூறுகிறார். மாணவனை நல்வழிப்படுத்துவது தான் ஆசிரியரின் கடமையே. ஆனால் அவன் எதை செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது அவனின் உரிமை.
சமூகம் என்றால் என்ன நாடு என்றால் என்ன நம்முடைய நாட்டின் கடமை என்ன என்பதையும் நாம் நம் ஆசிரியர் மூலமாகத் தெரிந்துக் கொள்கிறோம். ஆசிரியர் நம் திறமையை இந்த இந்த வழிகளில் வளர்க்கலாம் என்ற யோசனை கூறலாம். ஆனால் நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பல வழிகள் இருந்தாலும் எது நமக்குச் சரியானதாக இருக்கும் என்று யோசித்து முடிவெடுங்கள்.
எரிவிளக்காயினும் அதற்கோர் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். தூண்டுகோல் தான் உங்கள் ஆசிரியர்கள். உங்கள் திறமைகளுக்கு ஏற்ப உங்களை சிறந்த மாணவனாக யார் உருவாக்குகிறாரோ அவர் தான் நல்ல ஆசிரியர். புத்தகத்தில் உள்ளதை மற்றும் கற்றுக் கொடுக்காமல் எதிர்கால வாழ்க்கைக்கான பாதையை நமக்குக் காட்டுபவர் தான் சிறந்த ஆசிரியர். என்ன என்ன வழிகளில் சென்றால் முன்னேறலாம் என்று கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் தான். ஆனால் எதில் செல்ல வேண்டும் என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
Motivational stories in Tamil – நல்லா யோசிச்சு சொல்லுங்க… எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா?
Now that we have read two motivational stories in Tamil, the third story is a story about the how progress is very important to motivation and success. Efforts never fail. Only effort can make anyone truly successful. You should strive to improve every time you try. You don’t need to be 100% in the first attempt but you should be more than your previous attempt! These motivational stories in tamil will make you try harder!
99 மார்க் எடுக்கும் ஒருவர் 96 மார்க் எடுத்தாலும் அவர்தான் முதல்வர்.. சந்தேகமே இல்லை. ஆனால் 30 மார்க் எடுக்கும் ஒருவர் 33 மார்க் எடுத்தாலும் பெயில்தான்.. சந்தேகமே இல்லை.. ஆனால் முன்னவரை விட பின்னவர்தான் தனது படிப்பில் முன்னேறுகிறார்.. அதுதான் உண்மை.. அதைப் பலர் மறந்து விடுகிறோம்.
முன்னவர் தனது கவனத்தில் சறுக்கி வருகிறார்.. ஆனால் பின்னவரோ படிப்பில் முன்னேற ஆரம்பித்துள்ளார். இந்த முன்னேற்றத்தை ஒவ்வொரு தேர்விலும் அவர் மறக்காமல் காட்டத் தொடங்கினால்.. ஒரு நாள் அவரும் முதல்வர் ஆவார்.. இவ்வளவுதாங்க வாழ்க்கை.. “பிராகரஸ்”.. அதுதான் நமக்கு முக்கியம்.. வெற்றியெல்லாம் பின்னாடிதான்.
முயற்சி மட்டுமே நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லும். முதல் முறை 34 மார்க் வாங்குபவன் அடுத்த தேர்வில் 45 மார்க் வாங்கினால் அவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று பொருள். அவனுடைய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அடி மேல் அடி வைத்தால் தான் அம்மியும் நகரும் என்பார்கள். அதுபோல சிறிது முயற்சி எடுத்திருப்பவரை உன்னால் முடியும் நீ நினைத்தால் உன்னால் இதை விட இன்னும் அதிகமாக பெற முடியும் என்று அவனுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்.
எல்லோரும் பிறரிடம் எதிர்பார்ப்பது சின்ன சின்ன பாராட்டுகள் தான். அந்த பாராட்டுகளே ஒருவனை மென்மேலும் உயர்த்தும். ஒரு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் அடுத்த தேர்வில் எடுத்த தேர்வின் மதிப்பெண்ணையும் வைத்து சரிபாருங்கள். முதல் தேர்வில் எடுத்த மார்க்கை விட இரண்டாவது தேர்வில் இரண்டு மார்க் அதிகமாக எடுத்தால் கூட உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போடுங்கள். உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள்.
பாஸா பெயிலா என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்விலும் நம்முடைய மார்க் முந்தைய தேர்வை விட உயர வேண்டும். அதற்காக நீங்கள் முயற்சி செய்தால் போதும். அவ்வாறு செய்தால் நீங்களும் சிறந்த முதல்வர் தான். படிப்படியாக முன்னேறுகிறோமா என்பதை மட்டும் உன்னிப்பாக கவனியுங்கள். அதுவே உங்களைச் சிறந்த முதல்வராக்கும். முயற்சி தன்னம்பிக்கை இவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு தேர்வில் பாஸா பெயிலா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பிராகரஸை உயர்த்துங்கள். வெற்றி உங்கள் வசம் தான்.
Motivational stories in Tamil – “ஏ” சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் “பி” தான் ஜெயிக்கும்!
AWESOME!! You have read three full motivational stories in Tamil! The fourth Tamil story teaches us about the power of Plan B. Everyone strives for success using the first plan. Yes, sometimes you can become great with one plan. This passage is about how even if you fail in one plan, you can become successful in a second plan! You should not lose your motivation and positive thinking just because you failed in one plan. These motivational stories in Tamil will make you never give up!
அடடா பிளான் சறுக்கிருச்சே என்று பலர் வருந்துவார்கள், பதட்டமாவார்கள். கவலையை விடுங்க பாஸ்.. பல நேரங்களில் பிளான் பி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஜாம்பவான்களுக்கே அப்படித்தான் நடந்திருக்கிறது என்று இருக்கும்போது சாமானியர்கள் நாம் கவலைப்படலாமா.. .கூடவே கூடாது.. இன்னும் உத்வேகத்துடன் இறங்கி அடிக்க வேண்டும்.
ஒரு செயலை சரியாகச் செய்து முடிக்க எப்போதுமே நாம் இரண்டு பிளான் வைத்திருக்க வேண்டும். இது இல்லை என்றால் இன்னொன்று. இதற்காக கவலைப்படலாமா. நம் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நாம் வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இரண்டு திட்டங்கள் வைத்திருங்கள். ஒன்று சொதப்பினால் இன்னொன்று வைத்து நாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம்.
பள்ளிக் காலத்தில் நாம் கற்ற கணக்குகளில் கூட ஒரு கணக்கிற்கு விடை காண இரண்டு முறைகள் இருக்கும் போது நாம் நம்முடைய வேலையைத் திறம்பட செய்து முடிக்க எப்போதும் இரண்டு பிளான்கள் வைத்திருக்க வேண்டும். நாம் பயணம் செல்லும் காரில் கூட ஒரு டயர் பழுது அடைந்தால் இன்னொரு டயர் வைத்திருப்போம். அது போல் நாம் செய்யும் செயலிலும் வெற்றி பெற இரு வழிகள் வேண்டும்.
முதல் பிளானில் தோற்றால் கவலைப்படாதீர்கள். இருக்கவே இருக்கிறது இன்னொன்று அதை வைத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள். தோல்வி என்றும் நிரந்தரம் கிடையாது. இரண்டாவது வழியைத் தளராமல் முயற்சி செய்து வெற்றி பெறுங்கள்.
ஒன்று சொதப்பினால் என்ன அதான் இன்னொன்று இருக்கிறதே பிறகு எதற்கு கவலை. உங்கள் செயல்களைச் சிறப்பாக செய்து வாழ்வில் வெற்றி வாகை சூடுங்கள்.
Motivational stories in Tamil – நான் முழுமை அல்ல… ஆனால் நான் நானாக இருக்கிறேன்!
FANTASTIC!! You have successfully completed four positive Tamil motivational stories! Let us now progress onto the fifth Tamil positive motivational story. It teaches us that you do not need to be perfect and change yourself completely in order to become someone else. You must try and be yourself… only then will you truly be successful in life. Everyone has flaws. You must slowly work around your flaws by small changes and then you will get the positive motivation to become better!
முழுமை.. அதாவது Perfection.. அப்படின்னா என்னா.. நிறையப் பேருக்கு அதில ஒரு தெளிவு இருப்பதில்லை. சரியாக புரிவதும் இல்லை.
ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமைக்கு ஒரு அர்த்தம் உண்டு. இப்படி இருந்தால் முழுமை என்று சிலர் சில விஷயங்களை நினைக்கலாம்.
சிலருடைய பார்வையில் வேறு சில விஷயங்கள் இருந்தால் அதை முழுமை என்று அவர்கள் சொல்லலாம் என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமை வேறு படுகிறது, மாறுபடுகிறது.
வாழ்க்கையில் யாருமே முழுமையாக இருக்க முடியாது. எல்லாமே சரி என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே சில சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருக்க முயற்சியுங்கள்.. அதுதான் உண்மையான வெற்றி. நம்முடைய இயல்பு என்பது எதுவோ அதுதான் கடைசி வரை நமது அடையாளமாக இருக்க முடியும்.
குறைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. குறைகள் இல்லாவிட்டால் மனிதனாகவும் இருக்க முடியாது. யாரிடம் தான் குறை இல்லை. ஆனால் குறைகளைக் களைய நாம் முயல வேண்டும். எல்லாமே சரியாக இருக்காது. நாம் தான் அதை சரியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் நம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். நம்மிடம் உள்ள திறமைகளைக் கொண்டு நம் முயற்சியால் நாம் வெற்றி பெற முடியும்.
யாருக்காகவும் நாம் மாறக் கூடாது. மாறத் தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அது இயல்பான விஷயமாகவும் இருக்க முடியாது. செயற்கையாகவே அது இருக்கும். கடைசி வரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் தனித்துவத்தின் மூலம் வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் செயல்களில் உங்களுக்குத் தெரிந்தவற்றை செய்யுங்கள். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எல்லோருமே தனிப்பட்ட உயிர்கள்தான். யாரும் யாரையும் சார்ந்திருக்கவில்லை. யாரும் யாரையும் நம்பி இருக்கவில்லை. தன் கையே தனக்கு உதவி. கடவுள் படைத்த படைப்பில் உருவான நாம் இவ்வுலகை விட்டு நீங்கும் வரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் உங்களுக்குப் பிடித்தமானவற்றை விட்டுக் கொடுக்காதீர்கள். இருப்பது ஒரு வாழ்க்கை அதில் உங்களுக்குப் பிடித்தது போல வாழுங்கள்.
நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கென்று சில நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தை உங்களுக்குப் பிடித்தாற் போல செலவிடுங்கள். அது உங்களது நேரம்.. உங்களுக்கானது மட்டுமான நேரம். அதில் உங்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. பிறருக்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நாம் யார் நம்முடைய தனித்துவம் என்ன என்பதே மறந்து விடும். உங்களுடைய விருப்பத்திற்கேற்றார் போல இருங்கள்.
குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. குறையை மட்டும் பிறரிடம் கூறாமல் சில நிறைகளையும் கூறுங்கள். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் செயலில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். பிறர் குறை கூறுவதை எண்ணி வருந்தாதீர்கள். அதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கும். நீங்கள் எப்போதும் நீங்களாக இருங்கள்.
தங்க இறகுகள் கொண்ட அன்னப்பறவை – Tamil story about greed
This is one of the most beautiful Tamil stories which will inculcate positive behaviour in kids. This story teaches about how one should not be greedy and should be happy with who you are. In the above story, we learnt about how one should not change to become someone else in order to be successful. In this story, we learn about what happens when you become greedy and try to achieve immediate success by cheating. This positive story in Tamil will teach you to not be greedy!
ஒரு குளத்தில் அழகான தங்க அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு விவசாயியின் மறுஜென்மம் தான் இந்த அன்னப்பறவை. ஒரு நாள் அந்த விவசாயியின் மனைவி குளத்தில் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.
அந்தத் தங்க அன்னப்பறவை அவளை பார்த்தது. அதிசயம் என்னவென்றால் அந்த அன்னப்பறவை அவர்களிடம் பேசியது, “நான் தான் உன்னுடைய இறந்து போன கணவன். இப்போது தங்க அன்னபறவையாய் பிறந்துள்ளேன். உனக்கும் நம்மளுடைய பசங்களுக்கும் உதவி பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றது.
“ஆனால் உன்னால எப்படி எங்களுக்கு உதவி பண்ண முடியும்” என்று அவர் மனைவி கேட்டாள். அதற்கு அவர், “நீ தினமும் என்னிடமிருந்து ஒரு தங்க இறகை எடுத்துக் கொண்டு செல்லலாம். அதை விற்று உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்றது.
அதற்கு அவருடைய மனைவி, “நீ சொல்வது ரொம்பவே நல்ல யோசனை. இனிமேல் நாங்கள் எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை” என்றாள். தினமும் அவருடைய மனைவி யாருக்கும் தெரியாமல் குளத்திற்கு வந்து ஒரு தங்க இறகை எடுத்துக் கொண்டு செல்வாள்.
அப்படி ஒரு அழகான வீட்டையும் கட்டி விட்டார்கள். அவங்க வீட்டுல வேலைக்கு ஆளும் வச்சிருந்தாங்க. அப்போ ஒரு நாள் அவங்க யோசிச்சாங்க, “ஒருவேளை தங்க அன்னப்பறவை மட்டும் காணாமல் போனால் நான் என்ன பண்ணுவேன்”. அதனால் மறுநாள் குளத்திற்கு செல்லும் போது மனைவி அன்னப் பறவையிடம், “நீங்க எங்க கூடவே வந்து தங்கிக்கோங்க நாங்க உங்கள ரொம்ப நல்ல பாத்துக்குவோம்”அப்படி சொன்னாங்க.
அன்னப்பறவையும் உடனே ஒத்துகிச்சு. ஏன்னா அவரு அவரோட பசங்கள பாக்கணும்னு ஆசைப்பட்டார். மனைவி அவர்களுடைய வீட்டுக்குப் பின்னாடி அந்த அன்னப்பறவை தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தாள்.
அந்த அன்னப்பறவையும் அங்கே சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ரொம்ப நாள் அப்புறம் அந்தச் அன்னப் பறவைக்கு வயசு ஆகிடுச்சு. அவருடைய மனைவி தினமும் இறகு எடுப்பது கடினமாக உள்ளதால் ஒரேயடியாக நிறைய இறகுகளை எடுக்க முடிவு செய்து, அந்த அன்னப்பறவையிடம் சென்று இங்க பாருங்க தினம் ஒரு இறகை எடுப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
“அதனால சேர்த்து நிறைய இறகுகள் எடுக்கலாம் என்று எண்ணுகிறேன்” அப்படின்னு சொன்னாள். அதற்கு அந்த அன்னபறவை, “நீ சொல்லுவது சரிதான் ஆனால் என்னால் ஒரு தங்க இறகுக்கு மேல் ஒருநாள் தர இயலாது என்று சொன்னது”. உடனே மனைவி அந்த அன்னப்பறவையை பிடித்து எல்லா தங்க இறகுகளையும் எடுத்து விட்டாள். அப்போது அந்த இறகுகள் எல்லாம் சாதாரண இறகுகளாக மாறியது. உடனே அவள் அதிர்ச்சியுற்றாள்.
அப்போது அந்த அன்ன பறவை சொன்னது, “என் பேச்சை நீ மீறி விட்டாய். என்னால் ஒரு நாள் ஒரு தங்க இறகை மட்டுமே தர முடியும் அதற்கு மேல் தங்க இறகை என்னால் தர இயலாது” என்று சொன்னது.
உடனே அவள் கோபத்தில் அந்த அன்னப் பறவையை பிடித்து வெளியே எறிந்து விட்டாள். அந்த அன்னப்பறவையும் சோகத்தில் மீண்டும் குளத்திற்கு புறப்பட்டு சென்றது. அவர் மனைவி மீண்டும் எல்லா பணத்தையும் செலவழித்து ஏழையாக மாறி விட்டாள்.
அவளுக்கு இப்போது உதவி செய்ய எந்த அன்னப்பறவையும் இல்லை, யாரும் இல்லை.
Moral of the story in Tamil: நீதி : அதிர்ஷ்டம் நம் தலையெழுத்தை மாற்றும் போது அதை நாமே அழிக்கக்கூடாது.
Motivational Story in Tamil about the life of the great Tamil actor Surya
This is among my most favourite motivational stories in Tamil. It is the story about the super famous Tamil Actor Surya who is also one of my favourite actors! He is so positive and even though he had many flop movies, he still managed to climb the ladder of success and become super successful in the Tamil movie industry. Read this superb motivational story in Tamil about Surya and learn how he became so successful!
நடிகர் சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தாழ்வு மனப்பான்மையும் மற்றும் கூச்ச சுபாவமும் கொண்ட அவர், இன்று தன்னை மாற்றிக்கொண்டு வெற்றிப் படிக்கட்டின் உச்சியில் ஏறி நிற்கிறார். அவரது வளர்ச்சியைப் பற்றி அவரே சொல்ல கேட்கலாம். ‘ஒரு போட்டோவுக்காவது சிரியேண்டா’ என்று, கேமராவை கையில் எடுக்கும் ஒவ்வொரு முறையும் என் அப்பா (நடிகர் சிவக்குமார்) கூறுவார்.
நாலு பேருக்கு இடையே இருந்தால், ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு தான் இருப்பேன். எதாவது பேச வேண்டும் என்றால், வார்த்தைகளுக்காக தடுமாறுவேன். இந்த நிலையில் தான், இயக்குனர் வசந்த் என்னை கதாநாயகனாக (ஹீரோவாக) வைத்து படம் செய்ய ஆசைப்பட்டு, அப்பாவிடம் கேட்டார். அதற்கு அப்பா “அவனுக்கு நடிப்பில் சுத்தமாக ஈடுபாடு இல்லை” என்று சொல்லிவிட்டார். என்னிடம் வந்து கேட்டபோது, நானும் அதையேத்தான் சொன்னேன்.
கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நான், அதே தொழிலை சொந்தமாக செய்ய நினைத்தேன். கடன் பெற்று தொழில் தொடங்கினேன். தொழில் நன்றாகத் தான் நடந்தது என்றாலும், அந்தத் துறையில் நாளடைவில் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனது. அதனால் அந்த நிறுவனத்தை மூடிவிட்டேன். ரூ.25 ஆயிரம் கடன் ஏற்பட்டது தான் மிச்சம். அந்தக் கடனை அடைக்க, சினிமா ஒன்று தான் வழி என்று எனக்குத் தோன்றியது.
ஒரு காலத்தில் என்னை அணுகிய இயக்குனர் வசந்தை தொடர்பு கொண்டேன். அவர், போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மறுபடியும் பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே என்னை அழைத்து, “மணிரத்னம் தயாரிப்பில் ஒரு படம் செய்யப் போகிறேன். அதில் விஜய்யுடன் நடிக்க வேண்டும்” என்றார். இதுபற்றி அப்பாவிடம் கூறினேன். அவர், அந்தத் துறையில் எத்தகைய துன்பங்கள் இருக்கும் என்பதை விவரித்து “வேண்டாம்” என்று கூறிவிட்டார்.
நான் அப்பா சொன்னதை பொருட்படுத்தாமல் ‘நேருக்கு நேர்’ என்னும் அந்தப் படத்தில் நடித்தேன். டைரக்டர் மணிரத்னம் தான் ‘சரவணன்’ என்ற எனது பெயரை ‘சூர்யா’ என்று மாற்றினார். நடிப்பில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டேன். சினிமாவில் நல்ல பிரேக் கிடைப்பதற்காக காத்திருந்தேன். ஒரு நாள் இயக்குநர் பாலா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ‘சேது’ படத்தில் அப்பா நடித்தார். அதற்கான போட்டோ சூட்டுக்காக அவர் வந்தார். அப்போது நானும், நடிகை ஜோதிகாவும் நடித்த ஒரு படம் பற்றி பேசினார்.
அதில், ‘நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது’ என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். அதன் அர்த்தம், ‘உன் நடிப்பு நன்றாக இல்லை’ என்பது தானே!. டைரக்டர் பாலா இயக்கிய ‘சேது’ படமும், அதில் நடித்த நடிகர் ‘சியான்’ விக்ரம் ஒரே படத்தில் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றதும் என்னை தூங்க விடாமல் செய்தது. ஒரு நாள் டைரக்டர் பாலாவை சந்தித்து, “உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஹீரோவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுத்தால் போதும்” என்று கெஞ்சினேன். அந்த நேரத்தில் அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
அதற்கு அடுத்த வாரமே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் ஒரு படம் எடுக்கப் போவதாக டைரக்டர் பாலா அறிவித்தார். அதன்பிறகு ஒரு மாதம் கழித்து என்னை அழைத்த டைரக்டர் பாலா, “அஜித்துடன் எனக்கு செட் ஆகவில்லை. அந்த கதாபாத்திரத்தை நீ செய்கிறாயா?” என்று கேட்டார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. டைரக்டர் பாலா சொன்னபடி நடித்த ‘நந்தா’ என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு காலத்தில் என்னை திட்டியவர்களே, ‘சூர்யாவுக்குள் இவ்வளவு பெரிய நடிகர் ஒளிந்திருக்கிறாரர்?’ என்று பாராட்டினர்.
தமிழக அரசிடம் இருந்து அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க… காக்க…படத்துக்கான கதையோடு என்னிடம் வந்தார். அந்தப் படத்துக்காக போலீஸ்காரர்களுடன் நாள் கணக்கில் பழகினேன். அவர்களின் சுறுசுறுப்பு, கம்பிரத்தை எனக்குள் காட்டுவதற்கு முயற்சித்தேன். நானும் ஜோதிகாவும் இணைந்த படத்தில் முதல் பிளாக்பஸ்டர் படமாக அது அமைந்தது. தெலுங்கிலும் கூட என்னை ஸ்டார் ஆக்கிய படம் அது.
கிளாஸ் மட்டுமல்ல மாஸ் படங்களாக இருந்தாலும், ரிச்சாக இருக்க வேண்டும் என்பதால் ‘சிங்கம்’ சீரிஸ் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ‘சிங்கம் பட அனைவரையும் கவர்ந்தது. எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு கட்டத்தில் சிறு தடுமாற்றம் உண்டாகும். அப்படி ஒரு நிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் இருந்தது. அதில் இருந்து வெளியே வருவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தான், ‘கேப்டன் கோபிநாத் சுயசரிதத்தை சினிமாவாக எடுக்கிறேன்’ என சுதா கொங்கரா வந்தார். ‘எப்படி வருமோ?’ என்று சந்தேகத்தோடு பின்வாங்கிய என்னை, என் மனைவி ஜோதிகா பிடிவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தார்.
எனக்குள் இருந்து நடிப்பை வரவழைப்பதில், சுதா எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. இந்தப் படத்தில் நான் 17 வயது இளைஞனாக காட்சியளிக்க வேண்டும். அதை கிராபிக்ஸ் செய்யலாம் என்றதற்கு சுதா ஒத்துக்கொள்ளவில்லை. அந்த காட்சிக்காக எடையை குறைக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். எனக்கும் வேறு வழியில்லை. 30 நாட்களில் 10 கிலோ எடை குறைத்து அந்தக் காட்சியில் நடித்தேன்.
‘சூரரைப் போன்று’ படத்திற்காக தயாரிப்பாளராகவும், நடிகனாகவும் நான் பெற்ற இரண்டு தேசிய விருதுகளும் சுதா கொங்கராவுக்குள் உள்ள அர்ப்பணிப்பு உணர்வுக்கே சொந்தம்!.
தோல்வியும் வெற்றி தான்! – Motivational Story in Tamil about failure and victory!
Failure does not mean destroying positive attitude. Postive attitude will ensure that failures as treated as attempts to try harder in life. Read this motivational story in Tamil about how to treat defeat and how to treat success. It also teaches parents about how one should be very careful with giving punishment as well as showering praise.
ஒரு காலத்தில் பதக்கம், கோப்பை, கேடயம் போன்றவையெல்லாம் அரிதாகவே இருந்தன. ஆகையால், அந்த பரிசு பொருட்களுக்கு என்று தனி மரியாதையை இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் போட்டியை நடத்துபவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியை அதாவது நான்கில் ஒரு பங்கினை பரிசு பொருட்கள் வாங்குவதற்கே செலவு செய்கிறார்கள். இன்றைக்கு எல்லா குழந்தைகளும் எதாவது ஒரு பரிசை வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாக பிரித்து நடத்துகிறார்கள்.
விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெறவேண்டும் என்ற உந்துதலை / மோட்டிவேஷன் தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் முழு திறமையையும் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்து விடுகின்றது என்றே சொல்லலாம். பெரியவர்கள் பாராட்டும் போது தங்களை திறமைசாலி, அறிவாளி என்று மன மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு எதிலாவது தோல்வியை தழுவினால் மனம் சோர்ந்து சோகத்தில் அமர்ந்து விடுகிறார்கள்.
சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரைய (Drawing) சொல்லி அவர்களை கண்காணித்தார்கள். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவை இல்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவைகளை விட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே (Drawing Board) பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டும் என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்திற்கு காரணமாக இருந்தது.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ, கலையிலோ உண்மையாக திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம் புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமை காட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும், பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்து கொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றதிற்கு அங்கு என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும் போது, எதற்காக மண்டையை போட்டு குடைந்து கொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததெற்கெல்லம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிகாட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமாக செய்தார்களா, வெளிகாரணம் ஏதேனும் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்து திருத்தும் நாம், பாராட்டும் போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாக செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோர்க்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல. ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் வரை அல்லது அதில் வெற்றி பெறும் வரை அந்த செயலை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதும் ஒரு வெற்றி தான். தோல்வி எங்கே ஆரம்பிக்கின்றது? நாம் ஒரு செயலை மனதில் நினைத்து வெற்றி பெறுவோம் என்று ஆரம்பித்து அதை பாதிலேயே நிறுத்திவிட்டு அந்த செயலில் வெற்றி பெற முடியவில்லை என்று குறை சொல்வது மடமை ஆகும்.
இறைவன் நாம் அனைவருக்கும் திறமையை கொடுத்திருக்கிறான். ஆனால் நிறைய பேர் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்து அதை செய்து முடிக்க முயற்சி செய்யாமல், தன் நண்பரோ அல்லது உறவினரோ ஏதோ ஒரு செயலை செய்து அதில் வெற்றி பெற்றார் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டும் என்று முயற்சித்து நேரத்தையும், உழைப்பையும் வீணடித்து கடைசியில் தோல்வி அடைவர்.
கொஞ்சம் சிந்தியுங்கள் நம்மால் எது முடியும், நமக்குள் இருக்கும் திறமை என்ன என்பதை உணர்ந்து கொண்டு அதை முயற்சி செய்தால் தானே வெற்றி அடைய முடியும். மேலும் நமக்கு தெரிந்த வேலையையோ அல்லது செயலையோ செய்து முடிக்க காலம் எவ்வளவு ஆனாலும் அதை பொறுமையுடன் செய்ய பழக்க படுத்த வேண்டும். நாம் காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் குறிக்கோள் மீது கவனம் செலுத்தி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். நாம் இலக்கை அடைய சிறிது காலம் தாமதம் ஆனாலும் முயற்சியை கைவிடாமல், இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். வெற்றி என்பது இன்று வந்தால் என்ன, ஒரு மாதம் கழித்து வந்தால் என்ன வெற்றி என்பது வெற்றி தான்.
நாம் குறிக்கோள் நோக்கி பயணம் செய்து அதில் சிறிய முன்னேற்றத்தை பார்க்கும்போது நமக்கு வரும் அந்த மகிழ்ச்சி தருணம் தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நம்மை இன்னும் சுறுசுறுப்புடன் ஓட வைக்கும். எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதே திட்டமிட வேண்டும். அதில் நேர மேலாண்மைக்கு அதிக பங்கு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான உழைப்பை சரியான திசையில் நாம் கொடுக்கும் போது அது வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்!. நன்றி! வணக்கம்!!
எறும்பு மற்றும் வெட்டுக்கிளி! – Motivational Story in Tamil about the ant and the grasshopper
This is the famous story of the ant and the grasshopper in Tamil. It is a very famous Aesop’s fable story about how an ant works all summer to collect food for the winter so that it will not struggle. This positive thinking short story in Tamil will teach you about how one must be hard working in order to succeed in life.
மடத்தில் துறவி ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை புகட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சிறுகதையினை சொல்லி புரிய வைக்க நினைத்தார். ஆகையால் அந்த துறவி ஒரு எறும்பு கதையை தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார். அதாவது ஒரு எறும்பு ஆனது தன் வாயில் சற்று நீளமான ஒரு உணவுப் பொருலான ஓர் அரிசியை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் பாதையில் ஒரு வெடிப்பு (விரிசல்) தென்பட்டது. அதனால் அந்த எறும்பானது அந்த வெடிப்பினை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்து நின்றது.
கொஞ்ச நேரம் கழித்து, அந்த எறும்பு தன் கொண்டு வந்த அரிசியினை அந்த வெடிப்பின் மீது வைத்து அதை பாலமாக மாற்றி அதன் மீது ஏறி ஊர்ந்து சென்று வெடிப்பினை கடந்த பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். துறவி சீடர்களைப் பார்த்து, இந்த எறும்பினைப் போல் நாமும் நம் ஏற்படும் சவால்களையும், பிரச்சனைகளையும் பாலமாக வைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எதிர்ப்படும் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும். நமக்கு வருகிற இன்னல்களும், துன்பங்களும் காணாமல் போய்விடும் என்று சொல்லிக் கொடுத்து அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.
அமறுநாள் காலையில் துறவி மடத்தில் இருந்த தன் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தன்னம்பிக்கையான எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று அதே பாதையில் இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. எறும்பு செல்வதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே என்றது.
அதற்கு அந்த எறும்பு சொன்னது இன்னும் சில நாட்களில் கோடை காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன் என்றது எறும்பு. வெட்டுக்கிளி எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன.
கோடைகாலம் முடிந்து மழைக்காலமும் வந்தது. பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எறும்பு தான் சேகரித்த வைத்திருந்த உணவினை உண்டு தன் வீட்டிலே இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உண்ண உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி தொடர்மழையில் சிக்கித் தவித்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகையால் உணவு சேகரித்து வைத்து இருந்த அந்த எறும்பிடம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த வெட்டுக்கிளி விடாது மழையிலும் எறும்பின் வீட்டிற்கு வந்து எறும்பிடம், எனக்கு ரொம்ப பசியாக இருக்கிறது. மழையிலும் உண்ண உணவு தேடிப்பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. ஏதாவது உண்ண உணவு கொஞ்சம் தர முடியுமா? என்று கேட்டது.
எறும்பு தான் சேகரித்து வைத்து இருந்த உணவில் இருந்து கொஞ்சம் வெட்டுக்கிளையிடம் கொடுத்தது. எறும்பு சொன்னது, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே!. இப்போது நான் சேகரித்து வைத்து இருந்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பல் படாமல், கோடை காலத்தில் மழைக்காலத்திற்கு தேவையான உணவினை சேமித்து வைத்துக்கொள் என்றது. மழைக்காலம் வெயில் காலம் என்று கால நேரம் பாராமால் உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்து கொண்டது. உங்களுடைய கடின உழைப்பு உடனடியாகப் பலன் அளிக்கவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் அளிக்கும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.
அந்த துறவி சொன்ன கதையின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளுவது என்னவென்று பார்த்தால், முதலில் அந்த எறும்பின் சுறுசுறுப்பான உழைப்பினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. சேமிக்கும் பழக்கத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. காலம் அறிந்து செயல்படுதல் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது, கொடுத்து உதவும் பண்பினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. வெட்டுக்கிளியின் சோம்பறித் தனத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ராஜாவும் சிலந்தியும்! – Motivational Story in Tamil about the king and the spider
This is the famous aesop’s fable of the King and the spider in Tamil. It is a very famous tale of how a king loses a war and loses all his motivation and his drive to succeed. He is hiding in a cave and lears about how to become great by looking at a small spider. This positive thinking short story in Tamil will teach you about how one must never give up and try, try, try in order to succeed in life.
ஒரு போரில் தோல்வியுற்ற அரசன் ஒருவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடி ஒளிந்துக் கொண்டான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனுடைய படைகள் மிகவும் சிறியதாக இருந்த காரணத்தால் அவனால் அந்த போரில் வெல்ல முடியவில்லை. எதிரி நாட்டு அரசனிடம் மாபெரும் படைகள் இருந்த காரணத்தால் எதிரி நாட்டினர் மிக சுலபமாக வெற்றியை அடைந்தார்கள். தோல்வி அடைந்த அரசனை கொன்று விடுமாறு வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான்.
அதனால் தோல்வியுற்ற அரசன் அருகில் இருந்த காட்டிற்கு ஓடிச் சென்று அங்கே இருந்த ஒரு பாழடைந்த குகையினுள் ஒளிந்து கொண்டான். தோல்வியை கண்டதால் அரசன் மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டான். தோல்வி உண்டாக்கிய மனச்சோர்வினால் துணிவு இழந்து இருந்தான். எதனால் தோல்வியை அடைந்தோம் என்று எண்ணியபடி, அரசன் குகையில் படுத்து இருந்தான். அப்போது அந்தக் குகைக்குள் ஒரு சிலந்தி பூச்சியானது வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அந்த சின்ன சிலந்தி செயல் அரசனின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த பாழடைந்த குகையின் ஒரு பகுதியில் அந்த சிறிய சிலந்தியானது ஒரு வலையைப் பின்னுவதற்கு மிக கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் அது பின்னிய நூல் அறுந்து சிலந்தி பூச்சியானது கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை மேலே ஏறுவதும், கீழே விழுவதுமாகவும் நடந்தது. ஆனாலும், அது தன் எடுத்துக் கொண்ட முயற்சியினை இடையில் நிறுத்தாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. அந்த சிறிய சிலந்தியானது இறுதியில் வெற்றிகரமாக அதன் வலையைப் பின்னி முடித்தது.
அரசன் அங்கு நடந்தேறிய காட்சிகள் அனைத்தினையும் கூர்ந்து கவனித்தான். இந்த சிறிய சிலந்தியே பல முறை தோல்வி அடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நானோ ஒரு நாட்டின் அரசன் நான் ஏன் முயற்சியைக் கைவிட வேண்டும்?. நான் கண்டிப்பாக மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். ஆகையால் மீண்டும் தன் தோல்வியுற்ற எதிரி நாட்டினருடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த வந்த காட்டிற்கு வெளியே சென்று தனக்கு நம்பிக்கைக்குரிய நபர்களைச் சந்தித்தான்.
தன்னுடைய நாட்டில் உள்ள வீரர்களை எல்லாம் ஒன்றிணைத்து பலம் மிகுந்த ஒரு இராணுவ படையை உருவாக்கினான். தன் எதிரிநாட்டு வீரர்களுடன் மிக தீவிரமாகப் போர் புரிந்தான். இறுதியாக அந்த போரில் வெற்றியும் அடைந்தான். அதனால் அந்த அரசன் எதிரி நாட்டிடமிருந்து தன் நாட்டினை மீட்டியெடுத்து மீண்டும் அரசன் ஆனான். போரில் தோல்வியுற்று அந்த பாழடைந்த குகையினுள் படுத்து இருக்கும் அப்போது, அவனுக்கு அறிவுரை போதித்த அந்த சிறிய சிலந்தி பூச்சியினை அவன் என்றுமே மறக்கவில்லை.
நமக்கு ஏற்படும் தோல்வியை வெற்றியாக உரு மாற்றிக் கொள்ள மனதிற்குள் மிகுந்த தன்னம்பிக்கை எழ வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் நம்மை செதுக்கும். நம் எதிர்கொள்ளும் தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு செயல்படும் போது வெற்றி நிச்சயம் உண்டு. எத்தனை முறை தோல்வியை அடைந்தாலும் வெற்றி எனும் இலக்கினை அடைந்தே தீருவேன் என்ற ‘மனதைரியத்தோடு’ செயல்பட்டால் நாம் தோல்வியை தோற்கடிக்க வைக்கலாம்!
ஆபிரகாம் லிங்கனின் கதை – Motivational story about Abraham Lincoln in Tamil
This is the story of the famous historical figure, Abrain Lincoln, in Tamil. This is not a short story about his life. This is a story of all the defeats and the difficulties that Abraham Lincoln faced in his life and how he never lost his positive attitude and his motivation in order to succeed and become the president of the USA. This positive Tamil passage will teach you about how one must never give up in life.
தொடர்ந்து தோல்விகளை சந்திப்பவர்கள் எப்படி வெற்றிப் பாதைக்கு முன்னேற முடியும் என்பதற்கான ஒரு சான்று தான் ஆபிரகாம் லிங்கனின் கதை.
1809-ம் ஆண்டு: பிப்ரவரி 9 ஆம் நாள் பிறந்தார்.
1816-ம் ஆண்டு: குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வீட்டின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருபதற்காகவும் சிறுவயதிலேயே பணிக்கு சென்றார்.
1818-ம் ஆண்டு: நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயை இழந்தார்.
1828-ம் ஆண்டு: தன் சகோதரியை இழந்தார்.
1831-ம் வருடம்: தான் செய்து வந்த தொழில் நிறுவனம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
1832-ம் ஆண்டு: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
1832-ம் ஆண்டு: அதே வருடத்தில் தனது வேலையையும் இழந்தார். சட்ட கல்லூரி செல்ல முயன்றார். அங்கும் தோல்வி கண்டார்.
1833-ம் ஆண்டு: புதிய தொழில் தொடங்குவதற்கான தன் நண்பனிடம் ஒரு பெரிய தொகையை கடன் வாங்கினார். அந்த ஆண்டின் இறுதியில் மிகப்பெரிய கடனாளியாக மாறினார்.
1834-ம் ஆண்டு: மறுபடியும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார் இந்த முறை வெற்றி கண்டார்.
1835-ம் ஆண்டு: இவரின் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அவருக்கு நிச்சயிக்கபட்ட பெண் இறந்தார்.
1836-ம் ஆண்டு: எலும்பு முறிவு ஏற்பட்டு ஆறு மாத (Six Months) காலம் படுத்த படுக்கையிலேயே இருந்தார்..
1836-ம் ஆண்டு: சட்ட மன்றத்தில் சபாநாயகராக விரும்பினார் அதிலும் தோல்வி கண்டார்.
1842-ம் ஆண்டு: மேரி டோட் என்பவரை மணந்தார். இவருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆவார்கள்.
1843–1848-ம் ஆண்டு: மூன்று முறை காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
1849-ம் ஆண்டு: தன் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று நில அதிகாரியாக விரும்பினார். ஆனால் அதிலும் நிராகரிக்க பட்டார்.
1850-ம் ஆண்டு: தன் மகன் எட்வர்ட்டை இழந்தார்.
1854-ம் ஆண்டு: அமெரிக்கா நாட்டின் மேலவை பதவிக்காக போட்டியிட்டு தோல்வி கண்டார்.
1856-ம் ஆண்டு: துணை தலைவருக்கான பதவிக்கு வாக்கு எடுப்பு நடத்திய போது 100 வாக்குக்கும் குறைவாக பெற்றார்.
1858-ம் ஆண்டு: மீண்டும் மேலவை பதவிக்காக போட்டியிட்டு தோற்றார்.
1860-ம் ஆண்டு: அமெரிக்காவின் குடியசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அமெரிக்கா நாட்டின் புகழ்பெற்ற ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவரின் கதையே இது.
இவ்வளவு தொடர் தோல்விகளையும் பெற்று ஒருவர், உலகத்தில் மிகப்பெரிய நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என்றால், நாம் அடையும் தோல்விகளை வைத்து நாம் துவண்டு விடுவதில் எந்த நியாயமும் இல்லை. உங்கள் மீது ஏறியும் கற்களை, படிக்கற்களாக பயன்படுத்துங்கள். உங்கள் தோல்விகளை அலசி ஆராய்ந்து, அதை மீண்டும் செய்யாதீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போது, பல பாடங்கள் படிக்கும் பாக்கியம் பெறுவீர்கள். நீங்கள் வெற்றி பெறும் போது, நீங்கள் ஒரு கண்ணாடி மாதிரி பார்க்க அழகாக ரிவீர்கள்!.
ஆனால் ஒரு அடி பட்டால் நொருங்கி விடுவீர்கள். ஆனால் தோல்வியை பார்த்தவன், தங்கம் மாதிரி! தங்கம் ஆபரணமாக எத்தனை அடிகளை வாங்குகிறது தெரியுமா? ஒரு கல், சிலை ஆவதற்கு எத்தனை அடிகள் வாங்குகிறது? உங்கள் ஒவ்வொரு தோல்வியும், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் உங்களை செதுக்கி கொண்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். உங்களை எதிர்த்துப் போராட தயார்படுத்தும். இவ்வளவு நல்ல விஷயங்களை தோல்வி கற்று தரும். பயத்தைப் போக்கும் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்!.
மல்லிகாவின் வெற்றிக் கதை
This is the success story of a tribal village girl called Mallika who cracked the UPSC exam and became an IAS officer. Read about how much motivation she had even though all the odds were stacked against her!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் சிறிய பழங்குடி கிராமம் கக்குலா. படுகர் பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார், 25 வயதான மல்லிகா. ‘கல்விதான் வளர்ச்சியைத் தரும்’, என்ற பெற்றோரின் வார்த்தைகள் தான், படுகர் பழங்குடி இன மாணவியான மல்லிகாவை சாதனை படைக்க வைத்துள்ளது.
விடா முயற்சியால் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி
யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர்ச்சியாக முதல்நிலை தேர்விலேயே தோல்வியை சந்தித்தாலும், விடா முயற்சியால் பயின்று தன் நான்காவது முயற்சியில் இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்று யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளார்.
“அப்பா சுந்தரன், சிறிய அளவில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா சித்ரா தேவி, கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக இருக்க வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் கூறுவார்கள். படிப்பு ஒன்றுதான் வருங்காலத்தில் கைகொடுக்கும் என்பதுதான் அவர்கள் எனக்கு சொல்லி வந்தது.
அம்மா – அப்பாவின் தியாகம்
அம்மா – அப்பாவின் ஊக்கத்தால் தான் படிக்க முடிந்தது. அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் என் படிப்புக்காகவும் யூபிஎஸ்சி பயிற்சிக்காகவும் செலவழித்தனர். வசதியான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு எனக்காக எல்லாமே செய்தனர். கல்வியில் எனக்கு எல்லாம் சிறப்பானதாக கிடைக்க வேண்டும் என நினைத்தனர்.
8-ம் வகுப்பு வரை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியிலும் அதற்கு பிறகு குன்னூரில் உள்ள கான்வென்ட் பள்ளியிலும் பயின்றேன். 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்றேன். 12-ம் வகுப்பில் 1140 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு, அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி படித்தேன்.
முன்னாள் மாணவர்கள்
எங்கள் கல்லூரியல் பயன்ற முன்னாள் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வந்து ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவார்கள். அப்போதுதான் எனக்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கல்லூரியிலேயே வகுப்புகள் முடிந்தவுடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
2016-ல் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு யூபிஎஸ்சி தேர்வுக்கு முழுமையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். சென்னையில் தான் நான்கு ஆண்டுகள் படித்தேன். மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி மற்றும் சந்தோஷ் சபரி இன்ஸ்டிட்யூட்டில் படித்தேன்.
வெல்ல முடியும் என்ற நம்பிக்கை
மூன்று முறை என்னால் முதல்நிலை தேர்விலேயே வெற்றியடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். மிகவும் கஷ்டமானதாகத்தான் இருக்கும். ஆனால், அதனையும் மீறி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பெற்றோரும் இதனை தோல்வியாக எடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளித்தனர்” என்கிறார், மல்லிகா.
நன்றாக படிப்பவர்கள் தான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. விடா முயற்சி வேண்டும். நமக்கு நாமே ஊக்கமளித்துக்கொள்ள வேண்டும்” என மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார், மல்லிகா.
Positive Thinking Short Stories in Tamil PDF
PDF is such a versatile file format and you can download and print it, you can read it offline and you can even store it for later. Are you searching for a copy of the Positive Thinking Short Stories in Tamil in PDF version? If so, then you are in the right place. All the Positive Thinking Short Stories in Tamil are now in PDF form and you can read it whenever you want.
Positive Thinking Short Stories in Tamil PDF
You can click on the link above to download a PDF copy of the Positive Thinking Short Stories in Tamil PDF format.
Tags:
#Positive thinking kathaigal, #Positive thinking motivational kathaigal, #Positive thinking sirukathaigal, #Positive thinking motivational sirukathaigal, #Motivational Tamil sirukathaigal, #Motivational Tamil Siru kathaigal, #Motivational kathaigal in tamil, #motivational stories in tamil, #motivational stories in tamil PDF, #positive thinking motivational stories in tamil