Expand All   Collapse All

Short Moral stories in Tamil for kids

17 great Short Moral stories in Tamil for kids –  Moral Values stories in Tamil 

When we were children, our mother and father and even grandparents told us a lot of moral stories in Tamil. These short moral stories in Tamil not only taught us about how to speak the language but also taught us about the different moral values which we needed to inculcate. Especially these stories can be read to school students as they learn a lot. These stories will be very useful for becoming proficient in Tamil and for light reading for college students and for school students.

Short Moral stories in Tamil for kids
Short Moral stories in Tamil for kids

Tamil is a language which has a great history and culture, and hence we are always associated with great morals and values. There are a vast number of moral stories in Tamil. Some of these moral values stories in Tamil are related to animals as main characters, some of them have gods as the main characters, some of them have even insects as the main characters.

In this blog, we are going to go through many short moral stories in Tamil for children or kids. You can also find a PDF document in the end called “moral stories in Tamil PDF” which contain a large collection of short moral stories in Tamil.

 

Short Moral stories in Tamil for kids

Why should one read moral stories in Tamil? These stories teach children and kids about what is right and what is wrong. These stories build positive thinking, creativity and also moral values. Also they are a lot of fun to read. TAMIL IS AWESOME DAAAWWW!!!! If you read these short moral stories in Tamil for school students, the children will definitely have better moral values and succeed in life!

 

List of Short Moral stories for kids in Tamil and for school students

  1. தங்க இறகுகள் கொண்ட அன்னப்பறவை – Tamil story about greed
  2. எறும்பு மற்றும் வெட்டுக்கிளி! – The ant and the grasshopper
  3. ராஜாவும் சிலந்தியும்! – The king and the spider
  4. ஓநாயும் ஆடு மேய்க்கும் இடையனும்! – The Wolf and sheep
  5. ஒரு மனிதனும் பூனையும்! – The man helps the cat
  6. தீய பழக்கங்கள்! – bad habits are hard to stop
  7. நனைந்த கால்சட்டைகள் – A cute tamil story for children
  8. கோபத்தை கட்டுப்படுத்துதல்.! – Anger hurts people
  9. மூத்தோர் சொல் கேள்! – Listen to the elders of the family.
  10. சுவரின் மறுபக்கம்! – The flowers of the garden
  11. ஓநாயும் ஆட்டுமந்தையும்!- The Wolf
  12. விவசாயியும் கிணறும்! – Akbar and Birbal story – The farmer and well
  13. ஒட்டகமும் அதன் குழந்தையும்! – The camel and its baby
  14. ஒரு பெருமிதமுள்ள பயணி! – A man who boasts
  15. நான்கு மாடுகளும் புலியும்! – The tigers and the bulls
  16. பறவையும் ஆமையும்! – The bird and the tortoise
  17. தங்க முட்டை! – The goose and the Golden egg

 

தங்க இறகுகள் கொண்ட அன்னப்பறவை – Short Moral story in Tamil about greed

This is one of the most beautiful Tamil moral stories which will teach many values in kids, school students and is a great reading story for college students. This story teaches about how one should not be greedy and should be happy with whom you are. In the above story, we learnt about how one should not change one’s true self to become someone else just to be successful. In this story, we learn about what happens when you become greedy and try to achieve immediate success by cheating. This moral story in Tamil will teach you to not be greedy!

Short Moral stories in Tamil for kids
Short Moral stories in Tamil for kids

ஒரு குளத்தில் அழகான தங்க அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு விவசாயியின் மறுஜென்மம் தான் இந்த அன்னப்பறவை. ஒரு நாள் அந்த விவசாயியின் மனைவி குளத்தில் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.

அந்தத் தங்க அன்னப்பறவை அவளை பார்த்தது. அதிசயம் என்னவென்றால் அந்த அன்னப்பறவை அவர்களிடம் பேசியது, “நான் தான் உன்னுடைய இறந்து போன கணவன். இப்போது தங்க அன்னபறவையாய் பிறந்துள்ளேன். உனக்கும் நம்மளுடைய பசங்களுக்கும் உதவி பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றது.

“ஆனால் உன்னால எப்படி எங்களுக்கு உதவி பண்ண முடியும்” என்று அவர் மனைவி கேட்டாள். அதற்கு அவர், “நீ தினமும் என்னிடமிருந்து ஒரு தங்க இறகை எடுத்துக் கொண்டு செல்லலாம். அதை விற்று உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்றது.

அதற்கு அவருடைய மனைவி, “நீ சொல்வது ரொம்பவே நல்ல யோசனை. இனிமேல் நாங்கள் எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை” என்றாள். தினமும் அவருடைய மனைவி யாருக்கும் தெரியாமல் குளத்திற்கு வந்து ஒரு தங்க இறகை எடுத்துக் கொண்டு செல்வாள்.

அப்படி ஒரு அழகான வீட்டையும் கட்டி விட்டார்கள். அவங்க வீட்டுல வேலைக்கு ஆளும் வச்சிருந்தாங்க. அப்போ ஒரு நாள் அவங்க யோசிச்சாங்க, “ஒருவேளை  தங்க அன்னப்பறவை மட்டும் காணாமல் போனால் நான் என்ன பண்ணுவேன்”. அதனால் மறுநாள் குளத்திற்கு செல்லும் போது மனைவி அன்னப் பறவையிடம், “நீங்க எங்க கூடவே வந்து தங்கிக்கோங்க நாங்க உங்கள ரொம்ப நல்ல பாத்துக்குவோம்”அப்படி சொன்னாங்க.

அன்னப்பறவையும் உடனே ஒத்துகிச்சு. ஏன்னா அவரு அவரோட பசங்கள பாக்கணும்னு ஆசைப்பட்டார். மனைவி அவர்களுடைய வீட்டுக்குப் பின்னாடி அந்த அன்னப்பறவை தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தாள்.

அந்த அன்னப்பறவையும் அங்கே சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ரொம்ப நாள் அப்புறம் அந்தச் அன்னப் பறவைக்கு வயசு ஆகிடுச்சு. அவருடைய மனைவி தினமும் இறகு எடுப்பது கடினமாக உள்ளதால் ஒரேயடியாக நிறைய இறகுகளை எடுக்க முடிவு செய்து, அந்த அன்னப்பறவையிடம் சென்று இங்க பாருங்க தினம் ஒரு இறகை எடுப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

“அதனால சேர்த்து நிறைய இறகுகள் எடுக்கலாம் என்று எண்ணுகிறேன்” அப்படின்னு சொன்னாள். அதற்கு அந்த அன்னபறவை, “நீ சொல்லுவது சரிதான் ஆனால் என்னால் ஒரு தங்க இறகுக்கு மேல் ஒருநாள் தர இயலாது என்று சொன்னது”. உடனே மனைவி அந்த அன்னப்பறவையை பிடித்து எல்லா தங்க இறகுகளையும் எடுத்து விட்டாள். அப்போது அந்த இறகுகள் எல்லாம் சாதாரண இறகுகளாக மாறியது. உடனே அவள் அதிர்ச்சியுற்றாள்.

அப்போது அந்த அன்ன பறவை சொன்னது, “என் பேச்சை நீ மீறி விட்டாய். என்னால் ஒரு நாள் ஒரு தங்க இறகை மட்டுமே தர முடியும்  அதற்கு மேல் தங்க இறகை என்னால் தர இயலாது” என்று சொன்னது.

உடனே அவள் கோபத்தில் அந்த அன்னப் பறவையை பிடித்து வெளியே எறிந்து விட்டாள். அந்த அன்னப்பறவையும் சோகத்தில் மீண்டும் குளத்திற்கு புறப்பட்டு சென்றது. அவர் மனைவி மீண்டும் எல்லா பணத்தையும் செலவழித்து ஏழையாக மாறி விட்டாள்.

அவளுக்கு இப்போது உதவி செய்ய எந்த அன்னப்பறவையும் இல்லை, யாரும் இல்லை.

Moral of the story in Tamil:  நீதி : அதிர்ஷ்டம் நம் தலையெழுத்தை மாற்றும் போது அதை நாமே அழிக்கக்கூடாது.

 

More siruvar kathaigal for kids

LINKS
Motivational Tamil siru kathaigal
Short panchathanthira kathaigal in Tamil
Comedy stories and Fairy tale stories in Tamil
Tenali raman kathaigal

 

எறும்பு மற்றும் வெட்டுக்கிளி! – Short Moral stories in Tamil – The ant and the grasshopper

This is the famous moral story of the ant and the grasshopper in Tamil. It is a very famous Aesop’s fable story about how an ant works all summer to collect food for the winter so that it will not struggle. This short moral story in Tamil will teach you about how one must be hard working in order to succeed in life.

The ant and the Grasshopper in Tamil
The ant and the Grasshopper in Tamil

மடத்தில் துறவி ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை புகட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சிறுகதையினை சொல்லி புரிய வைக்க நினைத்தார். ஆகையால் அந்த துறவி ஒரு எறும்பு கதையை தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார். அதாவது ஒரு எறும்பு ஆனது தன் வாயில் சற்று நீளமான ஒரு உணவுப் பொருலான ஓர் அரிசியை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் பாதையில் ஒரு வெடிப்பு (விரிசல்) தென்பட்டது. அதனால் அந்த எறும்பானது அந்த வெடிப்பினை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்து நின்றது.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த எறும்பு தன் கொண்டு வந்த அரிசியினை அந்த வெடிப்பின் மீது வைத்து அதை பாலமாக மாற்றி அதன் மீது ஏறி ஊர்ந்து சென்று வெடிப்பினை கடந்த பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். துறவி சீடர்களைப் பார்த்து, இந்த எறும்பினைப் போல் நாமும் நம் ஏற்படும் சவால்களையும், பிரச்சனைகளையும் பாலமாக வைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எதிர்ப்படும் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும். நமக்கு வருகிற இன்னல்களும், துன்பங்களும் காணாமல் போய்விடும் என்று சொல்லிக் கொடுத்து அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.

அமறுநாள் காலையில் துறவி மடத்தில் இருந்த தன் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தன்னம்பிக்கையான எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று அதே பாதையில் இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. எறும்பு செல்வதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே என்றது.

அதற்கு அந்த எறும்பு சொன்னது இன்னும் சில நாட்களில் கோடை காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன் என்றது எறும்பு. வெட்டுக்கிளி எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன.

கோடைகாலம் முடிந்து மழைக்காலமும் வந்தது. பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எறும்பு தான் சேகரித்த வைத்திருந்த உணவினை உண்டு தன் வீட்டிலே இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உண்ண உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி தொடர்மழையில் சிக்கித் தவித்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகையால் உணவு சேகரித்து வைத்து இருந்த அந்த எறும்பிடம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த வெட்டுக்கிளி விடாது மழையிலும் எறும்பின் வீட்டிற்கு வந்து எறும்பிடம், எனக்கு ரொம்ப பசியாக இருக்கிறது. மழையிலும் உண்ண உணவு தேடிப்பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. ஏதாவது உண்ண உணவு கொஞ்சம் தர முடியுமா? என்று கேட்டது.

எறும்பு தான் சேகரித்து வைத்து இருந்த உணவில் இருந்து கொஞ்சம் வெட்டுக்கிளையிடம் கொடுத்தது. எறும்பு சொன்னது, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே!. இப்போது நான் சேகரித்து வைத்து இருந்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பல் படாமல், கோடை காலத்தில் மழைக்காலத்திற்கு தேவையான உணவினை சேமித்து வைத்துக்கொள் என்றது. மழைக்காலம் வெயில் காலம் என்று கால நேரம் பாராமால் உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்து கொண்டது. உங்களுடைய கடின உழைப்பு உடனடியாகப் பலன் அளிக்கவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் அளிக்கும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.

Moral of the short story in Tamil:  நீதி : அந்த துறவி சொன்ன கதையின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளுவது என்னவென்று பார்த்தால், முதலில் அந்த எறும்பின் சுறுசுறுப்பான உழைப்பினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. சேமிக்கும் பழக்கத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. காலம் அறிந்து செயல்படுதல் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது, கொடுத்து உதவும் பண்பினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. வெட்டுக்கிளியின் சோம்பறித் தனத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.

 

ராஜாவும் சிலந்தியும்! – Moral values short stories in Tamil – The king and the spider

This is the famous moral story from Aesop’s fable collection called “the King and the spider”. It is a very famous fale of how a king loses a war and loses all his hope to succeed. He hides in a cave and learns about how to not give up hope by looking at a small spider. These short moral values stories in Tamil will teach you about how one must never give up and try, try, try in order to succeed in life.

Moral values short stories in Tamil - The king and the spider
Moral values short stories in Tamil – The king and the spider

ஒரு போரில் தோல்வியுற்ற அரசன் ஒருவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடி ஒளிந்துக் கொண்டான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனுடைய படைகள் மிகவும் சிறியதாக இருந்த காரணத்தால் அவனால் அந்த போரில் வெல்ல முடியவில்லை. எதிரி நாட்டு அரசனிடம் மாபெரும் படைகள் இருந்த காரணத்தால் எதிரி நாட்டினர் மிக சுலபமாக வெற்றியை அடைந்தார்கள். தோல்வி அடைந்த அரசனை கொன்று விடுமாறு வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான்.

அதனால் தோல்வியுற்ற அரசன் அருகில் இருந்த காட்டிற்கு ஓடிச் சென்று அங்கே இருந்த ஒரு பாழடைந்த குகையினுள் ஒளிந்து கொண்டான். தோல்வியை கண்டதால் அரசன் மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டான். தோல்வி உண்டாக்கிய மனச்சோர்வினால் துணிவு இழந்து இருந்தான். எதனால் தோல்வியை அடைந்தோம் என்று எண்ணியபடி, அரசன் குகையில் படுத்து இருந்தான். அப்போது அந்தக் குகைக்குள் ஒரு சிலந்தி பூச்சியானது வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அந்த சின்ன சிலந்தி  செயல் அரசனின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த பாழடைந்த குகையின் ஒரு பகுதியில் அந்த சிறிய சிலந்தியானது ஒரு வலையைப் பின்னுவதற்கு மிக கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் அது பின்னிய நூல் அறுந்து சிலந்தி பூச்சியானது கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை மேலே ஏறுவதும், கீழே விழுவதுமாகவும் நடந்தது. ஆனாலும், அது தன் எடுத்துக் கொண்ட முயற்சியினை இடையில் நிறுத்தாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. அந்த சிறிய சிலந்தியானது இறுதியில் வெற்றிகரமாக அதன் வலையைப் பின்னி முடித்தது.

அரசன் அங்கு நடந்தேறிய காட்சிகள் அனைத்தினையும் கூர்ந்து கவனித்தான். இந்த சிறிய சிலந்தியே பல முறை தோல்வி அடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நானோ ஒரு நாட்டின் அரசன் நான் ஏன் முயற்சியைக் கைவிட வேண்டும்?. நான் கண்டிப்பாக மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். ஆகையால் மீண்டும் தன் தோல்வியுற்ற எதிரி நாட்டினருடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த வந்த காட்டிற்கு வெளியே சென்று தனக்கு நம்பிக்கைக்குரிய நபர்களைச் சந்தித்தான்.

தன்னுடைய நாட்டில் உள்ள வீரர்களை எல்லாம் ஒன்றிணைத்து பலம் மிகுந்த ஒரு இராணுவ படையை உருவாக்கினான். தன் எதிரிநாட்டு வீரர்களுடன் மிக தீவிரமாகப் போர் புரிந்தான். இறுதியாக அந்த போரில் வெற்றியும் அடைந்தான். அதனால் அந்த அரசன் எதிரி நாட்டிடமிருந்து தன் நாட்டினை மீட்டியெடுத்து மீண்டும் அரசன் ஆனான். போரில் தோல்வியுற்று அந்த பாழடைந்த குகையினுள் படுத்து இருக்கும் அப்போது, அவனுக்கு அறிவுரை போதித்த அந்த சிறிய சிலந்தி பூச்சியினை அவன் என்றுமே மறக்கவில்லை.

நமக்கு ஏற்படும் தோல்வியை வெற்றியாக உரு மாற்றிக் கொள்ள மனதிற்குள் மிகுந்த தன்னம்பிக்கை எழ வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் நம்மை செதுக்கும். நம் எதிர்கொள்ளும் தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு செயல்படும் போது வெற்றி நிச்சயம் உண்டு. எத்தனை முறை தோல்வியை அடைந்தாலும் வெற்றி எனும் இலக்கினை அடைந்தே தீருவேன் என்ற ‘மனதைரியத்தோடு’ செயல்பட்டால் நாம் தோல்வியை தோற்கடிக்க வைக்கலாம்!

 

ஓநாயும் ஆடு மேய்க்கும் இடையனும்! – short stories in Tamil with moral – The Shepherd who cried wolf!

This is the first among the 21 moral stories in Tamil for kids and for school students which we are going to read. This is a very famous Aesop’s fables story about how one should not lie. In this short Tamil moral story, a boy shouts “Wolf! Wolf!” and calls the village many times wasting their time. It teaches children that if liars tell the truth, no one will believe them.

short stories in Tamil with moral - The Shepherd who cried wolf!
short stories in Tamil with moral – The Shepherd who cried wolf!

முன்னொரு காலத்தில், ஒரு ஆடு மேய்க்கும் இடையச் சிறுவன் தனது ஆடுகளை மேய விட்டு விட்டு மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இருந்தான். பணியேதும் இன்றி ஓய்வாக அமர்ந்திருப்பது அலுப்பு ஏற்படுத்த, விளையாடும் எண்ணத்துடன் ,“ஓநாய்! ஓநாய் வருகிறது! என் ஆடுகளைக் கொன்று புசிக்க ஓநாய் வருகிறது!” என்று கூக்குரலிட்டான் சிறுவன். இந்த சிறுவனுடைய கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்து வயல்களில் விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர்.

சிறுவன் அருகே அனைவரும் வந்து பார்த்தால், அவன் கவலையின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். மேலும் அங்கு வருகை புரிந்தவர்களைப் பார்த்து இடைவிடாது நகைக்கத் தொடங்கினான். வருகை தந்தவர்கள் இவ்வாறு பொய்யுரைக்க வேண்டாம் என்று சிறுவனைக் கண்டித்துவிட்டு, தங்களது பணிகளைப் பார்க்க சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் சிறுவன் முன்பு போலவே,”ஓநாய்! ஓநாய் வருகிறது!”என்று கத்தினான்.இம்முறையும் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள், அவனது கேலிச்சிரிப்பைக் கண்டு,கோபமுற்று, “இவ்வாறு பொய் கூறாதே! மீறி கூறினால் உண்மையாக இது போன்ற சம்பவம் நேருகையில் உனக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.” என்று அறிவுறுத்திவிட்டு சென்றனர்.

சிறுவன் மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் மூன்றாவது முறையாக “ஓநாய் வருகிறது! ஓநாய்!” என்று கூக்குரலிட்டான். அவன் மீண்டும் பொய்யுரைக்கிறான் என்று எண்ணி கிராமமக்கள் யாரும் அவனை காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் இம்முறை உண்மையாகவே ஓநாய் வந்து அவன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளைத் துவம்சம் செய்துவிட்டு சென்றுவிட்டது.

இதனால் மனம் வருந்தி அழுது கொண்டே சிறுவன் மலையில் அமர்ந்துவிட்டான். மாலை வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனின் பெற்றோர் கிராமத்தாரின் உதவியுடன் சிறுவனைத் தேடிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அழுது கொண்டிருந்த சிறுவனிடம் விவரம் கேட்ட பொழுது, அவன், “உண்மையாகவே ஓநாய் வந்தது; அப்பொழுது நான் உங்களை அழைத்தேன் யாரும் உதவிக்கு வரவில்லை.ஓநாய் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறி நாலாப்பக்கமும் சென்று விட்டன. நான் அழைத்தும் யாரும் உதவ முன்வராதது ஏன்?” என்று கேட்டான்.

அப்பொழுது கிராமத்தை சார்ந்த ஒரு முதியவர், “மக்கள் பொய்யர்களை நம்பமாட்டார்கள். அவர்கள் உண்மையையே கூறினாலும் பொய்யர்களின் பேச்சினை யாரும் உண்மை என கருதமாட்டார்கள்.” என்று உரைத்தார்; பின் வாருங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம், காலை விடிந்ததும் ஆடுகளைத் தேடலாம் என்று கூறி அனைவரையும் இல்லம் நோக்கி செல்லுமாறு உரைத்தார்; சிறுவன் உட்பட அனைத்து மக்களும் இல்லத்தை நோக்கி செல்லத் தொடங்கினர்.

Moral of the children’s story in Tamil: நீதி: பொய்மை நம்பிக்கையை உடைக்க வல்லது, பொய்யர்கள் உண்மையையே கூறினாலும், யாரும் அவர்களை நம்பமாட்டார்கள்!

 

ஒரு மனிதனும் பூனையும்! – short stories in Tamil with moral – Man helps the cat

Now we are going to read the second moral stories in Tamil for kids and especially for school students. This is also a very famous Aesop’s fables story about humanity and how one must have moral values and be kind. In this short Tamil moral story, a man tries to help a poor animal in distress because he has humanity and must show his kindness.

short stories in Tamil with moral – Man helps the cat
short stories in Tamil with moral – Man helps the cat

ஒரு நாள் ஒரு நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்; அச்சமயம் ஒரு புதரில் ஓர் பூனை மாட்டிக்கொண்டு விடுபட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. புதரில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாததால் பூனை மிரண்டு போயிருந்தது.அதன் நிலையைக் கண்ட அந்த நபர் அதற்கு உதவ முற்பட்டார். புதரில் மாட்டியிருந்த பூனையை வெளியே கொண்டு வர முயற்சிக்கையில் பூனை தனது கரங்களால் அந்த நபரை கீறி, காயத்தை ஏற்படுத்தியது.

அந்த நபர் ஒவ்வொரு முறை அதைத் தொட்டு விடுவிக்க முயற்சிக்கையிலும், அப்பூனை இவ்வாறு கீறுவதை தொடர்ந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் இதைப் பார்த்துவிட்டு, பூனைக்கு உதவ முயலும் நபரிடம், “அப்பூனையை அப்படியே விட்டு விடுங்கள்; வீணாக நீங்கள் காயம் அடைவது ஏன்? அதுவே வெளியே வந்து விடும் என்று அறிவுறுத்தினார்.”

ஆனால் பூனைக்கு உதவிக்கொண்டிருந்த நபர், மற்றொரு நபர் கூறிய அறிவுரையைக் காதிலேயே வாங்கி கொள்ளாமல், பூனையை விடுவிக்க முனைந்தார். பின்னர் அந்த நபரிடம், “பூனை ஒரு மிருகம்.அதனால் அது அதன் தன்மையை வெளிப்படுத்தியது. நான் ஒரு மனிதன.ஆக நான் எனது மனிதத்தன்மையை வெளிப்படுத்தினேன்.” என்று கூறினார்.

Moral of the children’s story in Tamil: நீதி: உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயல்வாயாக! பிறரின் தேவையற்ற அறிவுரையைச் செவிமடுக்காது இருப்பாயாக!

 

தீய பழக்கங்கள்! – Moral short stories in Tamil – Bad habits are hard to uproot.

WOW!!! We have now completed two short moral stories in Tamil. Now let us read the third story. Like I said before, keep reading as these Tamil stories will build your language and also help light reading skills for school students and college students. This story is a very old Indian folktale about a sage who is trying to teach a boy about bad habits and how hard it is to change.

Moral short stories in Tamil – Bad habits are hard to uproot
Moral short stories in Tamil – Bad habits are hard to uproot

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார்.

அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பிடுங்கிக் காட்டினான். பின்னர் ஞானி சற்று பெரிய தாவரத்தை காட்டி, “இதை பிடுங்க இயலுமா?” என வினவினார்; சிறுவனும் எளிதாகப் பிடுங்கிக் காட்டினான்.

சற்று தூரம் சென்ற பின் ஒரு முட்புதரைக் காட்டி, இதனைப் பிடுங்கிட முடியுமா என்று வினவ சிறுவனும் தனது சக்தியைப் பயன்படுத்தி அதைப் பிடுங்கிக் காட்டினான்; பின்னர் ஞானி ஒரு சிறிய மரத்தைக் காட்ட, பெரும்முயற்சி மேற்கொண்டு சிறுவன் அதை சாய்த்துக் காட்டினான்.

இப்பொழுது ஞானி வயது முதிர்ந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி பிடுங்குமாறு சிறுவனிடம் கூற, சிறுவன் செய்வதறியாது நின்றான். அப்பொழுது ஞானி சிறுவனிடம், “பழக்கங்களும் இது போன்றதே!தீயப் பழக்கத்தை முளையில் கிள்ளி எறிந்துவிடலாம். ஆனால் அது வளர்ந்து விட்டால், அதிலிருந்து விடுபட்டு நற்பழக்கங்களை மேற்கொள்வது கடினம்.” என்று கூறினார்.

Moral of the children’s story in Tamil: நீதி: தீய பழக்கங்கள் நமது வழக்கமாகி விட்டால், அவற்றிலிருந்து மீள்வது கடினம்; ஆகையால், அவற்றை ஆரம்ப கால கட்டத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.

 

நனைந்த கால்சட்டைகள் – Short moral stories in Tamil – The story of the Wet pants

VERITHANAM!!! You have read three small moral stories in Tamil. Now let us read the fourth short story about moral values. Continue reading these Tamil stories and you automatically will build your reading skill and will be of great help to school students and college students. This story is one of my most favourite Indian folktales about a boy who is smartly trying to hide a small accident which he had in school.

Short moral stories in Tamil - The story of the Wet pants
Short moral stories in Tamil – The story of the Wet pants

பள்ளியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த ஒன்பது வயது மாணவன் திடீரென தனது கால்சட்டை ஈரமாவதை உணர்ந்தான்.உணர்ந்த சற்று நேரத்தில் அந்த ஈரத்தின் காரணம் சிறுவனுக்குப் புலப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தன்னை மற்ற மாணவர்கள் கண்டால், என்ன நினைப்பார்கள் என்ற பயம் மாணவனின் மனதில் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தூரத்தில் தனது தோழி சுஷி மற்றும் தனது ஆசிரியர் நடந்து வருவதைக் கண்டான்.அந்த மாணவன் தனது தோழி சுஷியின் கையில் ஒரு சிறு மீன்தொட்டி இருப்பதையும் கண்டான். உடனே யோசித்து, தோழி சுஷி தன் மீது மோதுமாறு, அவளுக்கு எதிராக நடந்து சென்றான.அவன் எதிர்பார்த்தது போலவே சுஷி கையில் வைத்திருந்த மீன்தொட்டியில் இருந்த நீர்,அவனது கால்சட்டையில் கொட்டியது.

அவனது ஆசிரியர் அவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்தான் என்பதை கவனித்து விட்டார்.ஆனால் அவனோ தன் மீது வேண்டுமென்றே சுஷி நீரைக் கொட்டித் தனது ஆடையை ஈரமாக்கி விட்டாள் என்று கத்தினான். உடனே ஆசிரியர் அவனை அருகிலிருந்த அறைக்கு அழைத்து சென்று கால்சட்டையைச் சுத்தப்படுத்திக்கொள்ள உதவினார். பின்பு அங்கு வந்த சுஷி அந்த மாணவனின் காதில், “நீ அதை வேண்டுமென்றே செய்தாய் அல்லவா? இது போன்று நானும் சில சமயங்களில் கால்சட்டையை ஈரமாக்கியுள்ளேன்.” என்று கிசுகிசுத்தாள்.

 

கோபத்தை கட்டுப்படுத்துதல்.! – Short moral stories in Tamil – Controlling anger

CONGRATS…. KALAKARENGA PONGA!!! You have finished four simple moral stories in Tamil. Fifth tamil story, here we come!!! This story is about anger and how it affects everyone forever. As a school student or a college student, you are undoubtedly going to face many situations in life wherein you get angry and yell at people without thinking. This short moral story in Tamil is a tale about a boy who is always angry at everyone and how his father teaches him a very valuable life lesson.

Short moral stories in Tamil - Controlling anger
Short moral stories in Tamil – Controlling anger

ஒரு பையன் எதற்கெடுத்தாலும் மிகவும் கோபப்படுபவனாக இருந்தான். அவன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அவனது வீட்டார் மற்றும் சுற்றத்தாரைப் பெரிதும் காயப்படுத்தின. பையனின் நிலையை மாற்ற விரும்பிய அவனது தந்தை, அவனிடம் ஒரு சுத்தியல் மற்றும் பை நிறைய ஆணிகளை தந்து, “உனக்கு எப்பொழுதெல்லாம் கோபம் வருகிறதோ அச்சமயம் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மரவேலியில் இந்த ஆணிகளை அடித்து விடு.” என்று கூறினார்.

பையனும் தந்தை கூறியவாறே செய்து வந்தான்.பையிலுள்ள ஆணிகள் விரைவில் தீர்ந்து போயின. தந்தை அடுத்த ஆணிகள் நிறைந்த பையைப் பையனிடம் கொடுத்தார். இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் தனது கோபம் குறைந்து,உணர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் வருவதை பையன் உணர்ந்தான். பின்னர் அதை அவனது தந்தையிடம் தெரிவித்தப் பொழுது, அவன் தந்தை,”இப்பொழுது நீ மரவேலியில் அடித்த ஆணிகளை எடுத்து விடு.” என்று கூறினார்.

தந்தை கூறியவாறு அடித்த அத்தனை ஆணிகளையும் எடுக்கையிலும் கூட, பையனுக்குக் கோபம் ஏற்படவில்லை; இதையும் கவனித்த தந்தை, தனது பையனை அழைத்து, “இப்பொழுது உன் கோபம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. ஆனால், நீ ஒரு விஷயத்தை கவனித்தாயா?”என்று கூறி, வண்ணம் தீட்டிய மரவேலியைக் காட்டி, அதில் நீ அடித்த ஆணிகளை நீக்கிய பின்பு ஏற்பட்டுள்ள துளைகளைக் கவனித்தாயா?

என்ன தான் வண்ணம் தீட்டி இருப்பினும் அத்துளைகள், மரவேலியின் அழகை குலைக்கின்றன.இதுபோல்தான் முதலில் நீ கோபப்பட்டு,தற்பொழுது அந்தக் குணத்தை விட்டு மீண்டு வந்திருந்தாலும் நீ பேசிய கோப வார்த்தைகளால் மற்றவர் மனதில் ஏற்பட்ட காயம் இத்துளைகள் போலவே ஆறாமல் இருக்கும். ஆகையால் இது போன்ற ஒரு தவறை இனி என்றும் உன் வாழ்நாளில் செய்யலாகாது.” என்று அறிவுரை கூறினார்.

Moral of the short children’s story in Tamil: நீதி: கோபம் என்பது ஒரு கத்தியைப் போன்றது; கத்தியைக் கொண்டு ஒரு மனிதனைக் குத்தினால், அதனால் ஏற்பட்ட காயம் ஆறிய பின்னும் அதனால் ஏற்பட்ட தழும்பு அந்நபரில் நிலைத்திருக்கும். அது போன்றே கோபத்தால் பேசிய வார்த்தைகளும் மனதில் ஆறா தழும்பை ஏற்படுத்திவிடும்.

 

மூத்தோர் சொல் கேள்! – Short Moral stories in Tamil – Listen to the older ones!

VERA LEVEL JI!….. You have finished five moral stories in Tamil and now you’re going to read the sixth one. This story is about listening to one’s parents. As a school student or a college student, one of the hardest things to do is to listen to one’s parents. At a young age, everyone wants to be free and make their own choices. This cute short moral story has a puppy as a main character who wont listen to its mummy.

Short Moral stories in Tamil for kids
Short Moral stories in Tamil for kids

ஒரு தாய் நாய் அதன் குட்டிகளுடன் ஒரு வயலின் அருகில் வசித்து வந்தது.எப்பொழுதும் தாய் நாய்க் குட்டிகளிடம், எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடுங்கள், ஆனால் அந்த கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறி இருந்தது. ‘அன்னை ஏன் கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்? அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது’ என யோசித்த ஒரு குட்டி நாய், கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தது.

அச்சமயம் நாயின் பிரதிபலிப்பு நீரில் தோன்றியது; குட்டி நாய் என்னென்ன செய்கிறதோ, அதை கிணற்று நீர் பிரதிபலித்தது. ஆனால் கிணற்றின் உள்ளே இருக்கும் வேறொரு நாய் தன்னைக் கேலி செய்வதாக எண்ணிய குட்டி நாய், அந்த கிணற்றிலிருக்கும் நாயுடன் சண்டையிடும் நோக்கில், கிணற்றில் குதித்தது. குதித்த பின்னர் தான் நாய்க்குப் புரிந்தது; அது தனது பிரதிபலிப்பு என்று. மேலே எப்படி செல்வது என்று அறியாமல், குரைத்து கொண்டே நீரில் நீந்திக்கொண்டிருந்தது குட்டி நாய்.

நாயின் குரைப்பு சத்தம் கேட்ட விவசாயி, நாயைக் கிணற்றில் இருந்து காப்பாற்றினார்; அச்சமயம் தாய்நாயின் அறிவுரையை மீறியது எத்தனை பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டது.

Moral of the children’s story in Tamil: நீதி: மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.

 

சுவரின் மறுபக்கம்! – Best Moral stories in Tamil – The flowers of the garden

Six moral stories in Tamil are now done!!! Just a few more to go!! Let us now read the 7th story. This story is about rewards and how sometimes life pays in mysterious ways. This very cute short moral story is about how a girl planted a tree in her garden and was sad that she never got a reward of seeing its flowers.

Moral stories in Tamil – The flowers of the garden
Moral stories in Tamil – The flowers of the garden

தன் பாட்டி உருவாக்கிய அழகிய தோட்டத்தைப் பக்குவத்துடன் பார்த்து பார்த்து கவனித்து வந்தாள் அந்த அழகான பெண். ஒரு நாள் ஒரு செடியைப் புகைப்படத்தில் பார்த்து, அதன் மலர்களின் அழகில் இலயித்த இந்தப் பெண், அச்செடியை வாங்கி வந்து, தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்தாள். அந்தச் செடிக்கென பிரத்யேக கவனிப்பு அளித்து வளர்த்து வந்தாள்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல கடந்தும், அச்செடிப் பூக்களைப் பூக்காமல் இருந்தது கண்டு, மனமுடைந்த அப்பெண் அச்செடியை அகற்றி விட முடிவெடுத்தாள். அச்சமயம் பக்கத்து வீட்டு முதியவர் இப்பெண்ணை அழைத்து, “அழகான மலர்களைத் தரும் செடியை நட்டு, என் மனதை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினாய்.இந்த வயதான காலத்தில் மனம் குழம்பி, தனிமையில் வாடிக்கொண்டிருந்த எனக்கு, நீ நட்டு வைத்த செடியில் பூத்த மலர்கள் மனமாற்றத்தை அளித்தன; அவற்றை காணும் பொழுதெல்லாம் என் மனம் பேருவகை அடைகிறது!”என்று மனம் நெகிழ்ந்தாள் அந்த மூதாட்டி.

அப்பொழுது தான் சுவரின் மறுபக்கத்தில் அழகான மலர்கள் மலர்ந்திருந்ததையும், தனது சுவரில் இருந்த பிளவுகளால், மலர்கள் எதுவும் பூக்காமல் இருந்ததையும், அந்தப் பெண் கவனித்தாள். மலர்களைக் கண்டு அவளும் பெரும்மகிழ்ச்சி அடைந்தாள்.

Moral of the short children’s story in Tamil: நீதி: நீங்கள் செய்த வேலைகளுக்கு நற்பலன் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தாதீர்; நீர் செய்த கடின உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைத்தே தீரும்.

 

ஓநாயும் ஆட்டுமந்தையும்! – Short Moral stories in Tamil – The Wolf

ADRAAAA SAKKKAAA!!!!….. You have finished eight Tamil moral stories for kids. This story is about the unfairness of life. Every school student or college student tries to blame other people for their own mistake. This short Tamil moral story is about how a wolf is treated unfairly by someone performing the same deed.

The wolf and the sheep
The wolf and the sheep

ஒரு நாள் ஓநாய் ஒன்று அருகில் இருந்த ஆட்டுமந்தையில், இருந்து தனக்கான உணவை அடித்து கொல்ல முயன்றது.அச்சமயம் ஓநாய் ஆடுகளை அடித்துக் கொல்ல முயல்வதை கண்ட ஆட்டுமந்தையின் உரிமையாளர், அந்த ஓநாயை அடித்து விரட்டினார்.ஓநாய் அதிக தூரம் செல்லும் வரை விரட்டியடித்தார்.

பின் இன்னொரு நாள் அதே ஓநாய் ஆடுகளை அடித்து, உணவு உண்ண வந்தது. அச்சமயம் அந்த உரிமையாளரின் வீட்டில் இருந்து நல்ல மணம் வந்தது. என்ன மணம் என்று அறிய எட்டிப்பார்த்த ஓநாய், அங்கு ஆடுகளை வெட்டி அறுசுவை உணவு சமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தது. அச்சமயம் ஓநாய்,“இதை நான் செய்தால் தவறு; அடித்து விரட்டுவீர். ஆனால் நீங்கள் செய்தால் சரியா?” என்று யோசித்தது.

Moral of the children’s story in Tamil: நீதி: நாம் நமது தவறுகளை எண்ணி பார்க்காமல், மற்றவர் செய்யும் தவறுகளைப் பெரிதாக பேசி அவர்களின் மீது குற்றம் சாட்ட முயல்கிறோம். இந்தப் பழக்கத்தை ஒவ்வொருவரும் கைவிட வேண்டும்.

 

விவசாயியும் கிணறும்! – Moral stories in Tamil – The farmer and well

Ippo namma vera type of story padikalaam!!! This 11th story is a very famous Akbar and Birbal moral story about how a man tries to cheat everyone and in the end he is taught a lesson by the great Birbal. When we were students in school or a college, did we not cheat once in a while? We might have also seen a few children who cheat all the time. This Tamil short story is about Birbal teaching a cheating man a lesson.

Moral stories in Tamil - The farmer and well
Moral stories in Tamil – The farmer and well

ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.அச்சமயம் ஒரு தந்திரமான விவசாயிடம் இருந்து கிணற்றை விலைக்கு வாங்கினார். பின் அந்தத் தந்திரமான நபர், அந்த விவசாயியைக் கிணற்றில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார்.விவசாயி,” ஏன் நீர் எடுக்கக்கூடாது?” என்று கேட்டதற்கு, “நான் உனக்கு கிணற்றை தான் விற்றேன். நீரை அல்ல!”என்று கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்றார்.

இதை குறித்து விவசாயி, அக்பர் அரசின் மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கிய ‘நீதியரசர் பீர்பால்’ அமைச்சராக இருக்கும் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை நன்கு கேட்டறிந்த பீர்பால் வழக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.

அச்சமயம் இருவரின் வாதத்தையும் கேட்டுவிட்டு, பீர்பால்,” தந்திரமான விவசாயி கூறுவது நியாயம்தான்.” என்று கூறி,ஒரு நிபந்தை இட்டார். “கிணறு விற்கப்பட்டது; ஆனால் நீர் விற்கப்படவில்லை; ஆகையால், நீங்கள் கிணற்றில் இருக்கும் நீரை இன்றே அகற்றிவிட வேண்டும்; இல்லையேல் நீர் அவருக்கே சொந்தமாகிவிடும்.” என்று அந்த நிபந்தனையே தீர்ப்பாக வாசித்தார்.

அந்த தந்திரமான விவசாயியும், தன் தவறை உணர்ந்து விவசாயி நண்பரிடம் மன்னிப்பு கேட்டார்.

Moral of the children’s story in Tamil: நீதி: ஏமாற்றுவது ஒரு நல்ல பழக்கமல்ல, இது அதிக காலத்திற்கு பலன் அளிக்காது; மீறி நீங்கள் யாரையேனும் ஏமாற்றினால், அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பீர்.

 

ஒட்டகமும் அதன் குழந்தையும்! – Moral stories in Tamil – The camel and its baby

BRILLIANT!!!! You have finished 9 children’s moral stories in Tamil and now you’re going to read the 10th one. This story is about a funny conversation between a camel and its baby.

ஒரு ஒட்டகமும் அதன் குட்டியும் பேசிக்கொண்டிருந்தன; அப்பொழுது ஒட்டகக் குட்டி, தாயிடம்,” நமக்கு ஏன் திமில் உள்ளது?” என்று கேட்டது; அதற்கு தாய் நாம் பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் இன்றி வாழ திமில் உதவும். பின்னர் குட்டி கேட்டது,”நமக்கு வட்டமானப் பாதம் இருப்பதேன்?” என்று. அதற்கு தாய், பாலைவன மணலில் நாம் நடக்க இந்த வட்டமான பாதம் உதவும் என்று பதிலளித்தது.

பின்பு குட்டித் தாயிடம்,” நமக்கு நீளமாக காது மடல்கள் இருப்பதேன்?” என்று கேட்டது. அதற்கு தாய்,” பாலைவனத்தில் மணல் நம் காதுகளுக்குள் சென்று விடாமல் தடுக்கவே பெரிய காது மடல்கள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன.” என்று விடை அளித்தது.

எல்லா பதில்களையும் கேட்ட குட்டி ஒட்டகம்,”இவை அனைத்தும் நாம் பாலைவனத்தில் இருந்தால் தானே பயன்படும், நாம் இருப்பதோ சரணாலயத்தில் அல்லவா? பின் இவற்றால் என்ன பயன்?”என்று கேட்டது. இதைக் கேட்ட தாய் வாயடைத்து நின்றது.

Moral of the children’s story in Tamil: நீதி: நீங்கள் ஒரு சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே, உங்கள் சக்தி, ஆற்றல், திறன் ஆகிய எல்லாமே பயன்படும்.

 

ஒரு பெருமிதமுள்ள பயணி! – Moral stories in Tamil – The man who boasts

INDHA KADHAI will definitely be suiting many of us or our student friends from school and college who like to boast a lot….. You have read 10 moral stories in Tamil. This story is about a young man who likes to boast a lot. This funny short story is about a traveller who boasts too much and finally gets caught because of his lies.

ஒரு பெருமிதமுள்ள பயணி, தனது பயணத்தை முடித்த பின் தான் செய்த சாகச விஷயங்களைப் பற்றியும், பார்த்த இடங்களைப் பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அச்சமயம் தான் ஒரு பெரிய பாலத்தை ஒரே பாய்ச்சலில் தாண்டி குதித்தாகப் பெரிதாக ஜம்பம் காட்டிப் பேசினார்.

அவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஒரு துடிப்பான இளைஞன், அங்கு இருந்த ஒரு பாலத்தைக் காட்டி, பயணத்தில் செய்த சாகசத்தை இங்கும் செய்து காட்டுமாறு கேட்டான். அதைக்கேட்டு அந்தப் பயணி, வியர்த்துக் கொட்ட நின்றுகொண்டு விழித்தார்.

Moral of the children’s story in Tamil: நீதி: உங்களால் செய்ய முடியாத ஒன்றை, செய்யமுடியும் என்று பெருமிதம் காட்டிப் பேசுவதைத் தவிருங்கள்!

 

 நான்கு மாடுகளும் புலியும்! – Moral stories in Tamil – The tiger and the bulls

You have finished many moral stories in Tamil which are at school student level and college student level. This story is about the moral “Unity is strength”.

நான்கு மாடுகள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றாக சேர்ந்து வளர்ந்து, உண்டு, ஒன்றாகவே இருந்து வந்தன. இவர்களின் ஒற்றுமை காரணமாக சிங்கமோ, புலியோ இவற்றை இரையாக்க முடியாமல் இருந்தன.அந்த அளவுக்கு நான்கு மாடுகளும் ஒற்றுமையுடன் இருந்தன.

சில நாட்களுக்கு பின், மாடுகளுக்குள் ஏற்பட்ட சண்டையால் அவைப் பிரிந்தன. பின் இதை சாதகமாக்கிக் கொண்ட புலி, அவற்றை மறைந்திருந்து, ஒவ்வொன்றாக வேட்டையாடிக் கொன்று,இறுதியில் அனைத்தையும் தனக்கு உணவாக்கிக் கொண்டது.

Moral of the children’s story in Tamil: நீதி: ஒற்றுமையே பலம்; ஒற்றுமையாக இருந்தால் அதிக நன்மை ஏற்படும்.

 

பறவையும் ஆமையும்! – Moral stories in Tamil – The bird and the tortoise

Intha tamil moral story is about how one should not go behind wealth and must focus on building family and friends!….. You’re going to read the thirteenth Tamil short story now. When we are young, we always want more and more money and wealth. In school, we want the richest phone. In college, we want a car or a bike. At a young age, everyone wants to be and act rich. This tamil kathai is about a conversation between a tortoise and a bird.

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது. அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது. அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.

Moral of the children’s story in Tamil: நீதி: தனியாக பெரிய பங்களாவில் வசிப்பதை விட, உறவு மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய குடிசையில் வசிப்பது மேல்!

 

தங்க முட்டை! – Moral stories in Tamil – The goose and the golden egg

KALAKARENGA!!! One more story done!….. This is one of my most favourite old fable of all time which is known by almost all school students or a college students. A goose lays one golden egg every day and he became very rich. One day he became greedy and paid the price greatly. This cute short moral story in Tamil teaches everyone how one should not be greedy.

ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்; அவரிடம் தங்க முட்டையிடும் ஒரு வாத்து இருந்தது. தினமும் அந்த வாத்து ஒரு தங்க முட்டை அளிக்கும்; அதை விற்று அந்த விவசாயி தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தார். திடீரென ஒரு நாள் வாத்தின் வயிற்றில் இருக்கும் அனைத்து முட்டைகளையும், ஒரே நாளில் எடுத்து விற்றுவிட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று சிந்தித்த விவசாயி, அதனை தனது மனைவியிடம் கூறினான்.

அவன் மனைவியும் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல், சரி என்று கூற, அச்சமயமே அவர்கள் வாத்தினை அறுத்து அதிலிருந்து தங்க முட்டைகளை எடுக்க முயன்றனர்; ஆனால் தங்கமுட்டைகளுக்குப் பதிலாக வாத்தின் உடலில் இருந்து இரத்தமே வெளிப்பட்டது. தம்பதியர் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் தங்களுக்கு இத்தனை நாள் சோறு போட்டுக்கொண்டிருந்த பெரும் மூலதனத்தையும் இழந்து தவித்தனர்.

 

Moral of the children’s story in Tamil: நீதி: செயல்படும் முன், நன்கு சிந்தித்து பின் செயல்பட தொடங்குங்கள்; சிந்தித்து செயலாற்றுங்கள்!

 

Short Moral Stories in Tamil PDF

PDF is such a versatile file format and you can download and print it, you can read it offline and you can even store it for later. Are you searching for a copy of the short Moral stories in Tamil in PDF version? If so, then you are in the right place. All the short Moral stories in Tamil are now in PDF form and you can read it whenever you want.

Short Moral stories in Tamil for kids

You can click on the link above to download a PDF copy of the short Moral stories in Tamil PDF format.

 

Tags:

#moral stories in tamil, #moral stories in tamil for children, #moral stories in tamil for children for kids, #moral values stories in tamil , #short moral stories in tamil, #small moral stories in tamil, #best moral stories in tamil, #moral stories in Tamil PDF, #moral stories for children in tamil, #moral stories for kids in tamil, #moral stories in tamil to read, #moral stories in tamil for college students, #moral stories in tamil for school students

Leave a Reply