Short Panchatantra Stories in Tamil for Kids – panchathanthira kathaigal in Tamil
Read a lot of the short Panchatantra stories in Tamil language in this website. Who wrote the world famous Panchathanthira Kathaigal? Why are Panchathanthira Kathaigal so famous in Tamil Nadu and why are Panchathanthira Kathaigal in Tamil so popular? In this section, we are going to learn about the history behind panchatantra kathaigal in Tamil.

Panchatantra kathaigal in Tamil
- About Panchatantra kathaigal in Tamil – தமிழில் பஞ்சதந்திரக் கதைகள் பற்றி
- About Panchatantra kathaigal in Tamil – தமிழில் பஞ்சதந்திரக் கதைகள் பற்றி
- About Panchatantra kathaigal in Tamil
- நண்டு, கொக்கைக் கொன்ற கதை – The crane and the crab
- ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை – The monkey and the woodcutter
- காக்கை, பாம்பைக் கொன்ற கதை – The Snake and the eggs – Panchathanthira kathaigal in tamil
- கழுதையின் மூளை- The brain of the donkey – Panchathanthira kathaigal in tamil
- விவசாயியின் கழுதை – The farmer, the son and the donkey – Panchathanthira kathaigal in tamil
- அடி வாங்கிய கழுதை – Panchathanthira kathaigal in tamil – The Donkey In the lion’s skin
- ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Tamil siru Kathai
- கரடியின் கதை – Panchathanthira karadi siru kathai
- நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை – The fox and the goat panchathanthira Siru kathaigal
- பறவையின் கூடு – panchathanthira kathaigal – Panchathanthira Siru kathaigal about the bird and the nest
- அழகியும் அசுரனும் – Beauty and the Beast Panchathanthira Siru kathaigal
- ஓநாயும் குதிரையும் – The wolf and the horse Panchathanthira Siru kathaigal
- ராஜாவின் சந்தேகம் குழந்தைகள் கதை – The King’s Favourite Servant Panchathanthira Kathaigal
- முட்டாள் குரங்குகள் – Panchathanthira Kathaigal about the foolish monkey and thefirefly
- சாமியாரின் சாமர்த்தியம் – Panchathanthira Kathaigal about the Sadhu and the coin
- கீரியும் பாம்பும் சிறுகதை – Panchathanthira Kathaigal about the faithful Mangoose story in Tamil
About Panchatantra kathaigal in Tamil
Before you start reading all the Panchatantra stories in Tamil, you should first learn about the history of Panchatantra.
- Who wrote Panchatantra in Tamil? Panchatantra stories were written by Vishnu Sharma
- When was Panchatantra written in Tamil? Panchatantra stories were written in 200 BC
- How many stories are there in Panchatanthira? Panchatanthira has about 300 kathaigal.
- Many of the Panchatantra kathaigal are based on animals and birds.
Panchathanthira kathaigal in Tamil – பஞ்சதந்திர கதைகள்
Now that we have learnt about the history of Panchatantra in Tamil, let us now read some very short stories of Panchatantra in Tamil. These Panchatantra stories will be quite fun to read and interesting as well
Panchatantra kathaigal in Tamil – நண்டு, கொக்கைக் கொன்ற கதை – The crane and the crab
This is the first story among the great collection of Panchatantra short stories in Tamil. In this wonderful kathai, a crane tricks and eats many fish by lying to them. He then tries to trick a crab who understands what is going on and uses his intelligence to escape and teach the crane a lesson. Let us now start reading the first of many Panchathanthira Kathaigal in Tamil.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.
“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.
“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.
“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.
“பரவாயில்லை சொல்லுங்களேன்”
“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”
மீனுக்குப் பரபரத்தது.
“சொன்னால்தானே தெரியும்”
“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.
“வரட்டுமே”
“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”
“அய்யய்யோ!”
உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.
சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.
அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.
“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.
“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.
கொக்குக்கும் கசக்குமா காரியம்?
நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.
“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.
வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.
பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.
அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.
“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.
“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”
“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”
“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.
குளத்துக்கு நேராக வரும்போது
அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.
வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.
More siruvar kathaigal for kids
Links |
Motivational Tamil siru kathaigal |
Short Moral stories in Tamil for kids |
Comedy stories and Fairy tale stories in Tamil |
Tenali raman kathaigal |
Panchathanthira kathaigal in tamil – ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை – The monkey and the woodcutter
WHHHOHOOOO!!!! VERITHANAM!!! Let us now proceed to the second Panchatanthira story in Tamil! In this panjathanthira kathai, a monkey watches a woodcutter cutting a tree and wants to do some mischief. Let us now start reading the second story of the many Panchathanthira Kathaigal in Tamil

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.
Panchathanthira kathaigal in tamil – காக்கை, பாம்பைக் கொன்ற கதை – The Snake and the eggs
Welcome to the third Panchatanthira story in Tamil! In this kathai, a snake eats the eggs of the crows every day and they ask a fox to help. The fox is very wise and tells the crow a bright idea to solve the problem. Let us now start reading the third of many Panchathanthira Kathaigal in Tamil

அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.
ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.
ஒருநாளா… இரண்டு நாளா பலநாள்!
காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்?
அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா?
ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.
நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.
“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.
“போட்டால்…?”
“போடு முதலில். அப்புறம் பார்”. என்றது.
காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை.
ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.
இருந்த அரசகுமாரியின் செடிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது’ என்று கத்தினர்.
உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.
காக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது.
உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.
‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.
சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.
Panchathanthira kathaigal in Tamil – கழுதையின் மூளை- The brain of the donkey
Welcome to the fourth Panchatanthira story in Tamil! In this short story, a fox helps a very lazy lion to find a donkey to eat. Let us now start reading the fourth of many Panchathanthira Kathaigal in Tamil.

ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு, அதுக்கு தொனயா ஒரு நரியும் இருந்துச்சு, சிங்கம் சாப்பிட்டு மிச்சம் வைக்கிறத சாப்பிட்டே உயிர் வாழ்ந்துச்சு அந்த நரி.
ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு, ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு
வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு, இந்த காட்டுல புத்தி இல்லாத மிருகங்கள் நிறைய இருக்கு அதுல ஒன்ன இங்கயே கொட்டிட்டு வர்றேன் அத கடிச்சு கொன்னுடுங்க நாம இங்கயே சாப்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு சொல்லுச்சு அந்த நரி
நல்ல யோசனனைனு சொல்லிட்டு, உடனே வெளியில போயி ஏதாவது மிருகத்த கூட்டிட்டு வர சொல்லுச்சு சிங்கம்
கொஞ்சம் தூரம் போன நரி கண்ணுல ஒரு கழுத்த பட்டுச்சு, உடனே அதுகிட்ட போன நரி கழுதையரே கழுதையரே உங்களுக்கு சிங்க ராஜாவ தெரியுமான்னு கேட்டுச்சு,
அதுக்கு அந்த கழுதையும் ஆமா தெரியுமேனு சொல்லுச்சு, அதுக்கு நரி சொல்லுச்சு அவருக்கு நண்பர்கள் யாருமே இல்லயாம் அதனால உங்கள அவர் நண்பரா சேர்த்துக்க கூட்டிட்டு வர சொன்னாருன்னு சொல்லுச்சு
அடடா ராஜ நட்பானு நினச்ச கழுத, முன்ன பின்ன யோசிக்காம நரி கூட சேர்ந்து சிங்கத்த பாக்க போச்சு
வெளியில போன நரிக்கு காத்துட்டு இருந்த சிங்கம் கழுதையோட வற்ற நரிய பாத்து மெதுவா பதுங்கி நின்னுச்சு, குகைக்குள்ள கழுத்த வந்ததும் ஒரே அடியா அடிச்சு அத கொன்னுடுச்சு
அதுக்கு அப்புறமா நரி கிட்ட சொல்லுச்சு, நரியாரே நமக்கு சுலபமா இன்னைக்கு இறை கிடைச்சுடுச்சு, ஆனா எனக்கு இன்னும் சோம்பேறித்தனமா இருக்கு அதனால நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு வர்றேன்
அதுவரைக்கு இந்த கழுதைய நீ காவல் கத்துக்கிட்டு இரு, என்ன விட்டுட்டு எதையாவது சாப்பிட நினச்சா உன்னையும் கொன்னுடுவேன்னு சொல்லிட்டு தூங்க போச்சு
ரொம்ப நேரம் ஆகியும் சிங்கம் வராததால கழுதையோட மூளைய எடுத்து தின்னுடுச்சு நரி,
தூக்கத்துல இருந்து எழுந்து வந்த சிங்கம், கழுத்தியோட மூளை இல்லாதத பாத்து ரொம்ப கோபப்பட்டுச்சு
நரியாரே நான் அவ்வளவு சொல்லியும் எனக்கு தெரியாம கழுதையோட மூளைய தின்னது ஏன்னு கேட்டுச்சு சிங்கம்
அதுக்கு நரி சொல்லுச்சு, இந்த கழுதைக்குத்தான் மூளையே இல்லையே, மூளை இருந்திருந்தா மாமிச உண்ணியான நான் கூப்பிட்டு வேட்டையாடி மாமிசம் திங்கிற உங்களோட நட்ப்பு வச்சுகிட இங்க வருமான்னு கேட்டுச்சு
அட ஆமாம்லனு சொல்லிட்டு, கழுதைய நரிகூட சேர்ந்து கடிச்சி திங்க ஆரம்பிச்சது,
அந்த நரி மாதிரி புத்தி கூர்மையா இருந்தா பலசாலியான சிங்கத்த கூட ஏமாத்திடலாம் போல
Panchathanthira kathaigal in Tamil – விவசாயியின் கழுதை – The farmer, the son and the donkey
Now on to story five of the Panchatanthira stories in Tamil! In this short story, a farmer and his son were taking a donkey to the market. On the way they encounter many people who give them different advice which they listen without thinking, Let us now start reading the fifth of many Panchathanthira Kathaigal in Tamil.

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு, அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு, உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.
தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி, அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு, கழுதை சும்மாதான நடத்துவது, உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு
உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி
கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு, அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு
உடனே விவசாயி சரினு தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு,
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம், ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .
உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு,
அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு
உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு, இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க, இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு, ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க,
அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு, ஆத்த கடக்கறப்ப கழுத்த பயத்துல துள்ளி குதிச்சது, உடனே பிடிய விட்டான் அந்த பையன், அப்ப அந்த கழுத்த ஆத்தோட போயிருச்சு
அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு, கழுதையும் போயிருச்சு, அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு
MORAL OF THE TAMIL STORY – நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது
Panchathanthira kathaigal in tamil – அடி வாங்கிய கழுதை – The Donkey In the lion’s skin
This is probably one of the most famous Panchatanthira stories of all time! In this short Tamil story, a donkey wears a lions skin and tries to play a prank on all the animals in the forest. Let us now start reading the fifth of many Panchathanthira Kathaigal in Tamil.

ஒருநாள் அந்த கழுத காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு, அப்ப ஒரு சிங்கம் படுத்திருக்குறத பாத்துச்சு, பயந்துபோன கழுத அசையாம நின்னுச்சு, கொஞ்ச நேரம் ஆகியும் சிங்கம் எழுந்திரிக்காதத பாத்து யோசிக்க ஆரம்பிச்சுச்சு
கிட்ட போய் பாத்தப்ப தான் தெரிஞ்சது அது இறந்துபோன சிங்கத்தோட தோல்னு,உடனே அந்த தோல எடுத்து தன்மேல போட்டுக்கிச்சு,
அப்படியே நடந்து போன கழுத நதி நீர்ல தன்னோட பிம்பத்த பாத்துச்சு, அடடா நாம பாக்குறதுக்கு சிங்கம் மாதிரியே இருக்கோமேன்னு நினைச்சது
இத வச்சு ஏதாவது பண்ணனும்னு நினச்ச அந்த கழுத மெதுவா நடந்து, பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு போச்சு
திடீர்னு ஊருக்குள்ள சிங்கம் வந்தத பாத்த எல்லாரும் பயந்து போனாங்க,எல்லாரும் பயந்து அங்கேயும் இங்கயும் ஓடுனாங்க
இத பாத்த கழுதைக்கு ஒரே சந்தோசம் அங்க இருந்த கத்திரிக்கா கூடைய அப்படியே தூக்கிகிட்டு காட்டுக்குள்ள ஓடுச்சு
அங்க இருந்த மரத்தடியில் உக்காந்து எல்லா கத்திரிக்கையையும் சாப்டுச்சு,நமக்க கடவுள் அருளால இந்த சிங்க தோல் கிடைச்சிருக்கு இத்தவச்சு இனி வேல செய்யாமலேயே சாப்பிடலாம்னு நினைச்சது
மறுநாளும் அந்த கிராமத்துக்கு போச்சு கழுத, எல்லாரும் பயந்து ஓடுனதும் அந்த இருந்த தானிய கூடைய தூக்கிக்கிட்டு காட்டுக்கு வந்துச்சு
நல்லா தின்னுட்டு தூங்குச்சு கழுத, மறுநாள் அந்த கிராமத்துக்கு வந்த கழுத அங்க இருந்தவங்க மறைஞ்சிருந்து பாத்தாங்க,
இது என்ன மாமிச பட்சியான சிங்கம், காய் கனி கூடைய தூக்கிட்டு போகுதுன்னு சந்தேக பட்டாங்க
உடனே மெது மறைஞ்சு மறைஞ்சு அந்த சிங்கத்து பின்னாடி போனாங்க, கழுத ரொம்ப சந்தோசமா இருந்ததாள பாட்டு பாடிகிட்டே போச்சு
கழுதையோட சத்தத்த கேட்ட கிராமத்து ஆளுங்களுக்கு அப்பத்தான் உண்மை புரிஞ்சது, உடனே ஒரு பெரிய குச்சியை எடுத்துட்டு வந்து அந்த கழுதையை அடி அடி னு அடிச்சு காட்டுப்பாக்கம் தொரத்திவிட்டுடாங்க
ஓநாயும் கொக்கும் – Panchathanthira kathaigal – The Wolf and Crane Story in Tamil
Great!! We are not done with 6 stories in panchathanthira kathaigal in tamil. The seventh story is called “The Wolf and Crane”. In this tamil story, a wolf plays has a bone stuck on its throat and asks a crane for help and offers him a reward.

ஒரு காட்டுல ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ஓநாய் ஒருநாள் சாப்டுகிட்டு இருந்துச்சு
அப்ப திடீர்னு ஒரு எலும்பு அதோட தொண்டைல சிக்கிக்கிச்சு, அதனால ஓநாய்க்கு ஒரே வலி எடுத்துச்சு
அந்த காட்டுல இருக்குற எல்லா மிருகத்து கிட்டயும் போய் உதவி கேட்டுச்சு, அந்த ஓநாய்
ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க
அப்ப அங்க ஒரு கொக்கு வந்துச்சு, அப்ப ஓநாய் கேட்டுச்சு, கொக்காரே கொக்காரே எனக்கு உதவு பண்ணுங்க, என்னோட தொண்டைல இருந்து எழும்ப எடுத்து என்ன காப்பாத்துங்கனு கேட்டுச்சு
ஆனா அந்த கொக்கு தனக்கு ஆபத்து வந்துடும்னு தயங்குச்சு
ஓநாய் சொல்லுச்சு நீங்க எனக்கு உதவுனீங்கன்னா உங்க வாழ்க்கையிலயே பெருசா நினைக்கிற பரிசு நான் தருவேன்னு சொல்லுச்சு
உடனே அந்த கொக்கு தன்னோட நீண்ட மூக்க ஓநாயோட தொண்டைக்குள்ள விட்டு அந்த எழும்ப எடுத்துச்சு
உடனே அந்த ஓநாய் கொக்குக்கு நன்றி சொல்லுச்சு, அதுக்கு அந்த கொக்கு கேட்டுச்சு எனக்கு ஏதோ பரிசு தரேன்னு சொன்னீங்களே அது எங்கன்னு கேட்டுச்சு
நீங்க வாழ்க்கைல அதிகமா நேசிக்கிறது உங்க உயிர்தான், நீங்க என்னோட வாய்க்குள்ள மூக்க விட்டப்ப உங்கள கடிக்காம இருந்தேன் பாருங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுத்த பரிசுன்னு சொல்லுச்சு
ஓநாயோட பேச்ச கேட்டு ஏமாந்துட்டமேன்னு நினைச்சது அந்த கொக்கு, இருந்தாலும் ஒரு உயிர காப்பாத்துன திருப்தில பறந்து போச்சு அந்த அந்த கொக்கு
கரடியின் கதை – Panchathanthira karadi kathai
Great!! We are not done with 6 stories in panchathanthira kathaigal in tamil. The seventh story is called “The Wolf and Crane”. In this tamil story, a wolf plays has a bone stuck on its throat and asks a crane for help and offers him a reward.

ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள், அவுங்க ஒருநாள் காட்டு வழியா பக்கத்து ஊருக்கு போய்கிட்டு இருந்தாங்க
அப்படி போறப்ப ஒரு அடர்ந்த புதர்ல இருந்து ஏதோ சத்தம் வந்தது
ரெண்டு நண்பர்களும் ரொம்ப பயந்து போனாங்க
அப்பத்தான் ஒரு பெரிய கரடி அவுங்கள நோக்கி வந்துகிட்டு இருந்துச்சு
ராமு உடனே வேகமா ஓடி போயி ஒரு மரத்துல எறிகிட்டான்,
அவனுக்கு தன்னோட வந்த நண்பன விட தன்னோட உயிர் தான் முக்கியமா இருந்துச்சு அதனாலதான் சோமுவ அந்த கரடிகிட்டயே விட்டுட்டு ஓடிட்டான்
இத பாத்த சோமுவுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு, எனக்கு மரம் ஏற தெரியாதேன்னு இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சான்
அப்பத்தான் அவுங்க தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு கரடி செத்துப்போன எந்த பொருளையும் சீண்டாதுன்னு
உடனே சோமு மெதுவா கீழ படுத்துகிட்டு செத்தது மாதிரி நடிச்சான்
கிட்ட வந்த அந்த கரடி மெதுவா அவனை மோந்து பாத்துச்சு
எந்த அசைவும் இல்லாம இருந்த சோமுவ விட்டுட்டு அது பாட்டுக்கு போயிடுச்சு
இந்த காட்சிய மரத்துமேல இருந்து பாத்த ராமுவுக்கு கரடி என்னமோ சோமு காதுல சொன்ன மாதிரி இருந்துச்சு
மெதுவா கீழ வந்த ராமு சோமுகிட்ட அந்த கரடி உன் காதுல என்ன சொல்லுச்சுன்னு கேட்டான்
அப்பத்தான் சோமு சொன்னான் ஆபத்தான நிலைல உன்ன விட்டுட்டு போன நண்பன் கூட எப்போதும் சேராதனு சொல்லுச்சுன்னு சொல்லிட்டு தனியா நடக்க ஆரம்பிச்சான்
தன்னோட சுயநலத்த நினைச்சு வருத்த பட்டான் ராமு
Panchathanthira Kathaigal – நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை – The fox and the goat
FANTASTIC!! We are done with 8 panchathanthira kathaigal in tamil. The ninth story is called “The fox and the goat”. In this tamil story for kids, a fox gets stuck in a well and has to find a way to escape. See how he uses his intelligence and wits to escape from the well! You will enjoy all panchathanthira kathaigal in tamil after this story

ஒரு நாள் ஒரு நரி பாலைவனத்துக்கு போச்சு, அங்க ரொம்ப வெயில் அடிச்சதால அந்த நரி ரொம்ப சோர்வகிடுச்சு
ரொம்ப தாகம் எடுத்த அந்த நரி எதாவது தண்ணி தர்ற கிணறு, குளம் இருக்கானு பாத்துகிட்டே போச்சு
அப்பத்தான் அங்க ஒரு கிணறு இருக்குறத பாத்துச்சு, உடனே ரொம்ப சந்தோஷமான அந்த நரி அந்த கிணத்துமேல ஏறி தண்ணி இருக்கான்னு பாத்துச்சு
அப்ப திடீர்னு கால் வழுக்கி தண்ணிக்குள்ள விழுந்துச்சு அந்த நரி, எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல
காப்பாத்துங்க, காப்பாத்துங்கனு கத்திகிட்டே இருந்துச்சு அந்த நரி, அந்த பக்கம் யாருமே இல்லதுனால ரொம்ப நேரம் அந்த நரி கத்திகிட்டே இருந்துச்சு
அப்பத்தான் ஒரு ஆடு அந்த பக்கமா வந்துச்சு, கிணத்துக்குள்ள இருந்து சத்தம் வராத கேட்ட அந்த ஆடு மெதுவா எட்டி பாத்துச்சு
அடடா நரியாரே கிணத்துக்குள்ள என்ன பன்றிங்கன்னு கேட்டுச்சு
அப்பத்தான் நரிக்கு ஒரு யோசனை வந்துச்சு, நம்மள யாரும் மேல இருந்து காப்பாத்த முடியாது, யாராவது உள்ள குதிச்சுதான் காப்பாத்த முடியும்
ஆனா தன்னோட உயிர பணயம் வச்சு யாரும் தன்ன காப்பாத்த கிணத்துக்குள்ள குதிக்க மாட்டாங்க அப்படிங்கிற உண்மையும் புரிஞ்சுச்சு
நமக்குன்னு கிடைச்ச இந்த ஆட்ட ஏமாத்துறத தவிர வேற வழி இல்லைனு முடிவு பண்ணுன அந்த நரி, ஆடு கிட்ட சொல்லுச்சு இங்க நிறைய நல்ல தண்ணி இருக்கு ரொம்ப குளிர்ச்சியவும் இருக்கு அதான் ரொம்ப சந்தோஷத்துல கத்திடேன்னு சொல்லுச்சு
அவ்வளவு நல்ல தண்ணியா இருக்குன்னு கேட்டுச்சு அந்த ஆடு, ஆமாம் ஆடாரே நீங்க வேணும்னா உள்ள வந்து பாருங்கன்னு சொல்லுச்சு
முட்டாளான அந்த ஆடு யோசிக்காம உள்ள குதிச்சது, உடனே அந்த ஆடு அந்த தண்ணிய குடிச்சு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு
நரியாரே நீங்க சொன்ன மாதிரி இது ரொம்ப சுவையான நீரை இருக்குன்னு சொல்லுச்சு, ஆமா இப்ப நாம எப்படி வெளிய போகப்போறோம்பு கேட்டுச்சு
அதுக்கு அந்த நரி நாந்தான் இருக்கேன்ல நீ என்மேல ஏறி வெளிய போயிடுனு சொல்லுச்சு ஆடும் அதுக்கு சரின்னு சொல்லுச்சு,
ஆனா முதல்ல நான் உன்மேலே ஏறி வெளிய போறேன் அடுத்து நீ என்மேல ஏறி வெளிய வான்னு சொல்லுச்சு
நரியோட பேச்சுல இருக்குற சூத அறியாத அந்த முட்டாள் ஆடும் நரி வெளிய போக குனிஞ்சு நின்னுச்சு, உடனே அந்த நரி அந்த ஆடு மேல ஏறி வெளிய போயிடுச்சு
நரியாரே இப்ப என்ன வெளிய எடுங்கன்னு சொல்லுச்சு, நான் உள்ள இல்லாதப்ப என்னால எப்படி உனக்கு குனிய முடியும் முட்டாள் ஆடேன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு அந்த நரி
நரியால ஏமாத்த பட்ட அந்த ஆடு அடடா அந்த நரி சொன்னத அப்படியே நம்பி இப்படி ஏமாந்துட்டமேன்னு சொல்லி வறுத்த பட்டு அழுத்துச்சு அந்த ஆடு
MORAL OF THE STORY IN TAMIL: குழந்தைகளா யார் என்ன சொன்னாலும் அந்த வார்த்தைய நல்லா புரிஞ்சுகிட்டு அதுல இருக்குற உண்மைய தெளிவா தெரிஞ்சுக்கிட்டு அடுத்த காரியத்த செய்யணும் இல்லைனா இந்த ஆடு மாதிரி கஷ்டம்தான் கிடைக்கும்
பறவையின் கூடு – panchathanthira kathaigal – A short Tamil moral story about the bird and the nest
11 panchathanthira kathaigal in tamil is now completed, several more to go. The 12th story is called “The bird and the nest”.

ஒரு காட்டு பகுதியில ஒரு குட்டி குருவி வாழ்ந்துகிட்டு வந்துச்சு,அந்த குருவிக்கு தனக்குன்னு ஒரு வீடு கட்டணும்னு ரொம்ப ஆச
அதனால கஷ்டப்பட்டு குட்டி குட்டி குச்சிகளை சேகரிச்சு சின்னதா ஒரு வீடு கட்டுச்சு,
ஆனா அந்த காட்டுல அடிக்கிற வேகமான காத்தால அந்த கூடு சீக்கிரமே உடைஞ்சு போச்சு
அதனால சோகமான அந்த குருவி ஒருநாள் பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு மேல பறந்துபோச்சு
அடடா இந்த மனிதர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகான வீடு கட்டுறாங்கன்னு பாத்துகிட்டே போன அந்த குருவி, களிமண்ண பூசி வீடு கட்டுறத பாத்துச்சுச்சு ஒரு இடத்துல
அடடா மனிதர்கள் தங்களோட வீட நல்ல பாதுகாப்போடு கட்டுறது மாதிரி நாமளும் கட்டாம இப்படி சோகமா இருந்துட்டமேன்னு நினைச்சது
அதனால காட்டுக்கு வந்த அந்த குருவி குச்சிகளோட சேத்து களிமண்ணையும் சேர்த்து புது வீடு கட்டுச்சு
மிக பெரிய காத்து அடிச்சப்ப கூட அந்த கூடு களையாம இருந்துச்சு
MORAL OF THE TAMIL SHORT STORY: குழந்தைகளை பழைய வழி எதுவா இருந்தாலும் புதிய மாற்றங்கள நாம பின்பற்ற ஆரம்பிக்கணும் அப்பதான் புது வழியில வீடுகட்டுன அந்த குருவி மாதிரி நிறைய சாதிக்க முடியும்
Panchathanthra Kathaigal – அழகியும் அசுரனும் – Beauty and the Beast in Tamil
This is one of my absolute favourite panjathanthira story of all time. This is very famous in English and even a cartoon movie is made by Disney for this story for kids. It is a short story of how a beautiful girl who meets a terrible beast in the forest. She gets stuck in his castle and learns more about him. You will enjoy all panchathanthira kathaigal in Tamil after this story.

ஒரு ஊருல ஒரு அழகான பொண்ணு இருந்தா, அவள் ரொம்ப தைரியமான பொண்ணா இருந்தா
அந்த ஊருல ஒரு ரவுடி பையனும் இருந்தான் அந்த ஊருல இருக்குறவங்க எல்லாரும் அவனுக்கு பயந்தாங்க, ஒருநாள் அழகி மார்க்கெட் போயிட்டு திரும்பி வர்றப்ப அந்த பையன பாத்தா
எந்த பயமும் இல்லாம எனக்கு வழிய விடுன்னு சொன்னா அந்த பொண்ணு
தன்னை பாத்து பயப்படாத அந்த அழகிய பாத்து ரொம்ப கோபப்பட்டான் அந்த பையன், அவளோட வீட்டுக்கே வந்து அவளை மிரட்டினான் அந்த பையன்
அந்த அழகியோட அப்பா வந்து அவன சமாதான படுத்தி அனுப்பிச்சாரு, ஒருநாள் அழகியோட அப்பா ஒரு காட்டுக்குள்ள இருக்குற அரண்மனைக்கு போனாரு, அங்க என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு ஆவலா இருந்துச்சு அவருக்கு
அப்பத்தான் ஒரு பெரிய அரக்கன் ராஜா உடைய மாட்டிகிட்டு அவருக்கு முன்னாடி வந்தான்
என்னோட இடத்துல நீ என்ன பண்றன்னு கேட்டு அவரை புடிச்சு ஜெயில்ல போட்டான்
தன்னோட அப்பாவ காணாத அழகி தன்னோட குதிரையை எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள போனா, அங்க இருந்த அரண்மனைய பாத்ததும் இதுக்குள்ள அப்பா இருக்கறன்னு போயி தேடுனா
அப்ப அங்க வந்த அரக்கன் நீ எப்படி இங்க வந்தன்னு கேட்டான், தன்னோட அப்பாவ தேடி வந்தத சொன்ன அழகிய பிடிச்சி சிறைல அடைக்க போனான்
தயவு செஞ்சு எங்க அப்பாவ விடுவீங்க அவருக்கு பதிலா நான் ஜெயில்ல இருக்கேன்னு சொன்னா அந்த பொண்ணு
உடனே அவுங்க அப்பாவ வெளிய அனுப்பிச்சிட்டு, அந்த பொண்ண அடைச்சு வச்சான் அந்த அரக்கன்
தன்னோட அப்பாவ நினச்சு அழுதுகிட்டே இருந்தா அந்த பொண்ணு, நீ அழுகாத உன் அப்பா வீட்டுக்கு போயிருப்பாரு வேணும்னா இந்த மந்திர கண்ணாடில பாருன்னு சொல்லி ஒரு கண்ணாடியை கொடுத்தான் அந்த அரக்கன்
அந்த கண்ணாடில அவுங்க அப்பா கட்டு வழியா போறது தெரிஞ்சுச்சு, அப்பா நிறைய ஓநாய்கள் அவரை தாக்குறதையும் பாத்தா
உடனே தப்பிச்சு ஓடுன அந்த பொண்ணு அங்க இருந்த ஓநாய்கள விரட்ட ஆரம்பிச்சா, எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த ஒநாய்கள விரட்ட முடியல
அப்ப அங்க வந்த அந்த அரக்கன் எல்லா ஓலைகளையும் விரட்டுன்னான்.
அப்ப ஒரு ஓநாய் அவன கடிக்காது, வழியோட அந்த அழகிய தூக்கிகிட்டு தன்னோட அரண்மனைக்கு போனான் அந்த அரக்கன்
ரொம்ப களைப்பா இருந்த தாள படுத்து தூங்கினான் அந்த அரக்கன், முழிச்சு பாத்தப்ப தன்னோட கடிபட்ட கைல கட்டு போட்டிருக்குறத பாத்தான், தனக்கு உணவும் செஞ்சு வச்சுருக்குறத பாத்தான்
உடனே அந்த அழகி மேல அவனுக்கு பாசம் வந்துச்சு, தன்னோட அப்பாவுக்கு ஏதாவது ஆபத்து வருமான்னு கேட்டா அழகி
இல்ல நீ வேணும்னா அந்த கண்ணாடிய பாருன்னு சொன்னான்,அந்த கண்ணாடில அந்த ரவுடி பையனும் கிராமத்து ஆட்களும், அவுங்க அப்பாவ அடிக்கிறத பாத்தா
உடனே நான் எங்க அப்பாவ பாக்கணும்னு சொன்னா அந்த அழகி
அழகியோட பாசம் ஏற்பட்ட அந்த அரக்கன் நீ வேணும்னா அந்த கண்ணாடிய வச்சுக்க, உனக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டா அந்த கண்ணாடி வழியா என்ன கூப்பிடுன்னு சொன்னான்
உடனே தன்னோட கிராமத்துக்கு போன அழகி, அந்த கூட்டத்தார் தன்னோட அப்பாவ அடிக்கிறத பாத்தா
எதுக்கு இப்படி செயிரீங்கன்னு கேட்டா, அதுக்கு அந்த ரவுடி பையன் சொன்னான் நீங்க அந்த காட்டுக்குள்ள யாருகூட சேந்து இருக்கீங்கன்னு கேட்டான்
அப்ப அந்த மந்திர கண்ணாடி கீழ விழுந்துச்சு, அதுல அந்த அரக்கனோட உருவத்தை பாத்த எல்லாரும் பயந்தாங்க
இப்பவே அங்க போயி அவனை கொல்லணும்னு எல்லாரும் கிளம்புனாங்க, தன்னையும் தன்னோட அப்பாவையும் காப்பாத்துன அந்த அரக்கன காப்பாத்த, அந்த அழகி பின்னாடியே போனா
கிராமத்து ஆட்கள் எல்லாரும் அந்த அரணைக்குள்ள போனாங்க, அப்ப அந்த அரக்கன் வந்து எல்லாரு கூடையும் சண்டை போட்டான், அவனுக்கு பின்னாடி வந்த அந்த ரவுடி ஒரு ஈட்டிய எடுத்து அந்த அரக்கன குத்துன்னான்
மெதுவா கீழ விழுந்த அந்த அரக்கன பாத்துட்டு எல்லாரும் வெளிய போயிட்டாங்க, தனக்கு உதவி செஞ்ச அந்த அரக்கனோட நிலைமையை நினச்சு வறுத்த பட்ட அந்த அழகி அழுகை ஆரம்பிச்சா
அவளோட கண்ணீர் அந்த அரக்கன் மேல விழுந்துச்சு, உடனே அந்த பாழடைந்த அரண்மனை ஜொலிக்க ஆரம்பிச்சுச்சு
அரக்க ரூபத்துல இருந்த நாத அரக்கன் மெதுவா ஒரு அழகான இளவரசனா மாறுனான்
மெதுவா எழுந்து என்னோட தவறினால் இத்தனை நாலா அரக்கனா இருந்தேன், இன்னைக்கு உன்னாலதான் நான் திரும்பவும் மனுசனா மாறினேன்னு சொன்னான்
அவுங்க ரெண்டு பெரும் அந்த அரண்மனைல ரொம்ப நாள் வாழ்ந்தாங்க
Panchathanthra Kathaigal – ஓநாயும் குதிரையும் – The wolf and the horse
ஒரு காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு
ரொம்ப தூரம் நடந்த குதிரைக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுச்சு, அந்த பசியோட நடந்த அந்த குதிர ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு
உணவு தேடிகிட்டே நடந்த அந்த குதிரைய அங்க இருந்த ஒரு ஓநாய் பாத்துச்சு
அடடா இவ்வளவு பெரிய குதிர தனியா போகுதே, இந்த குதிரைய நாம வேட்டையாடுனோம்னா நம்ம கூட்டத்துக்கே ஒரு வாரம் வேற உணவு தேவ இல்லையேனு நினைச்சி பாத்துச்சு
ஆனா இந்த குதிரை ரொம்ப பெருசா இருக்கே இத எப்படியாவது நம்ம கூட்டம் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போனா மட்டும்தான் எல்லோரும் சேந்து இந்த குதிரைய வேட்டையாடலாம் இல்லைனா இந்த குதிரை தப்பிச்சு போயிடும்னு தனக்குள்ள பேசிக்கிட்டே ஓநாய் குதிரை கிட்ட வந்தது
நண்பரே நீங்க ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி இருக்கு என்கூட வாங்க நான் வைக்கோல் நிறைய இருக்குற இடத்த கட்டுரேன்னு சொல்லுச்சு
புத்திசாலியான அந்த குதிரை லேசா சிரிச்சிகிட்டு
நீ என்ன வைக்கோல் திங்குற மிருகமா? உனக்கு எப்படி அந்த இடம் தெரியும்? உனக்கு வைக்கோல் திங்கிற பழக்கம் இருந்தா கூட நீ எதுக்கு எனக்கு அத விட்டு கொடுக்கணும்? இது மாதிரி நிறைய கேள்வி கேட்க ஆரம்பிச்சிச்சு குதிரை
திடீர்னு இந்த கேள்விகள சந்திச்ச குதிரைக்கு என்ன பண்றதுனு தெரியாம உளறுச்சு
உன்னோட வேலை எல்லாம் என்கிட்டே காட்டதன்னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சுச்சு குதிரை
MORAL OF THE TAMIL SHORT STORY: குழந்தைகளை எப்போதும் துன்பத்தையே தர்றவங்க நல்லது செஞ்சாலும் அவுங்கள முழுமையா நம்ப கூடாது, அப்படி நம்பினீங்கன்னா இந்த குதிரமாதிரி தப்பிச்சி போகாம, ஓநாயோட சூழ்ச்சில மாட்டிக்குவீங்க
Panchathanthira Kathaigal – ராஜாவின் சந்தேகம் குழந்தைகள் கதை – The King’s Favourite Servant
This is a Tamil panjathanthira story with a good moral about loyalty. It is a short story of how a servant shows his loyalty to the king.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு நிறைய மந்திரிங்க இருந்தாங்க
எல்லா மந்திரிகளும் ராஜா சொல்றத கேட்டு நல்லபடியா வாழ்ந்தாங்க
ஒரு நாள் ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு
எல்லாரும் தன்கிட்ட நடிக்கிறாங்களோ அப்படின்னு
உடனே ஒரு பரிட்சை வைக்க எண்ணுனாரு
ஒரு நாள் காட்டுக்கு எல்லா மந்திரிகளையும் கூட்டிகிட்டு போனாரு அந்த ராஜா
ராஜா சொன்னாரு இது மிக பெரிய காடா இருக்கு , நிறைய காட்டு விலங்குகள் இருக்கு எல்லோரும் பத்திரமா இருங்கன்னு சொன்னாரு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு வைரங்கள் நிறைஞ்ச பைய கீழ போட்டாரு அதுல இருந்த வைரங்கள் எல்லாம் கொட்டுச்சு
எத பாத்த ராஜா அடடா வைரம் கீழ விழுந்துடுச்சா பரவால்ல நீங்க எல்லோரும் வேணும்ங்கிறத எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு அந்த ராஜா
உடனே எல்லா மந்திரிகளும் வைரங்களை பிறக்க ஆரம்பிச்சாங்க
ஒரு மந்திரி மட்டும் ராஜா கூடவே நின்னரு , அவரை பாத்த ராஜா , ஏன் நீங்க வைரத்த பொறக்கல அப்படின்னு கேட்டாரு
இல்ல ராஜா வன விலங்குகள் எதாவது உங்கள தாக்கிட போகுது அதனாலதான் நான் உங்கள பாதுகாக்க இங்க நிக்குறேன்னு சொன்னாரு
அப்பத்தான் ராஜாவுக்கு தெரிஞ்சது யார் நல்ல மாதிரின்னு
உடனே அவரை முதல் மந்திரியா ஆக்கி அவர் கூடவே வச்சுக்கிட்டாரு
Panchathanthira Kathaigal – முட்டாள் குரங்குகள் – The story of the foolish monkey and the firefly
This is a Tamil panjathanthira story with a funny moral story about a foolish monkey.
ஒரு அடர்ந்த காட்டு பகுதியில ஒரு குரங்கு கூட்டம் வாழ்த்துகிட்டு வந்துச்சு
அது குளிர்க்கலாம்கிறதால ரொம்ப குளிர் அடிச்சது
ரொம்ப குளிர் அடிச்சதால குளிர் காஞ்சா நல்லா இருக்கும்னு ஒரு பெரிய குரங்கு சொல்லுச்சு
அப்பத்தான் அங்க ஒரு மின்மினி பூச்சி பறந்து வந்துச்சு அத நெருப்புன்னு நினச்ச குரங்குங்க
அத பிடிச்சு சின்ன சின்ன குச்சிகள் மேல போட்டுச்சு
அடடா என்ன இது நெருப்ப போட்டு கூட இந்த குச்சிங்க நெருப்ப பிடிக்க மட்டுத்தேனு சொல்லுச்சு ஒரு குரங்கு
ஏய் மெதுவா ஊத்துங்க நெருப்பு அணஞ்சிர போகுதுன்னு சொல்லுச்சு ஒரு குரங்கு
இத கேட்ட எல்லா குரங்குகளும் மெதுவா ஊதா ஆரம்பிச்சது
எவ்வளவு ஊத்துனாலும் நெருப்பு பரவல
இந்த முட்டாள் தனத்த பத்த ஒரு குருவி உண்மைய சொல்லுச்சு என்ன தான் நீங்க ஊதினாலும் நெருப்பு பிடிக்காது ஏன்னா அது நெருப்பு பூச்சியே தவிர நெருப்பு இல்ல அப்படின்னு சொல்லுச்சு
இத கேட்ட எல்லா குரங்குக்கும் அப்பத்தான் தங்களோட முட்டாள் தனம் புரிஞ்சுச்சு
Panchathanthira Kathaigal – சாமியாரின் சாமர்த்தியம் – The Sadhu and the coin
This is a panjathanthira story in Tamil with a moral about a king who wanted to invade a country but learns his lesson on what is the meaning of money and what is not.
ஒரு நாட்டுல ஒரு சாது நடந்து போய்கிட்டு இருந்தாரு
அவருக்கு கீழ கிடந்து ஒரு நாணயம் கிடைச்சது, பிச்ச எடுச்சு வாழ்க்க நடத்துற அவருக்கு அந்த நாணயம் தேவ படல
அதனால யாருக்கு தேவபடுதோ அவருக்கு இந்த நாணயத்த கொடுக்கணும்னு அவரு நினைச்சாரு
அந்த நாட்டுல இருக்குற எல்லாரையும் பாத்துகிட்டே நடந்து போனாரு அந்த சாது
அந்த நாட்ல இருந்த எல்லாரும் ரொம்ப சந்தோசமா திருப்தியான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தாங்க
அதனால யாருக்குமே அந்த நாணயம் தேவைப்படல
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அந்த நாட்டு ராஜா படையோடு அந்த பக்கம் வந்தாரு
அந்த சாதுவ பாத்த ராஜா படையோடு அவரு கிட்ட வந்து நின்னரு
சாது கேட்டாரு எங்க போறீங்கன்னு கேட்டாரு
அதுவா நான் பக்கத்துக்கு நாட்டு மேல படையெடுத்து போறேன்
அந்த நாட்ட ஜெயிச்சா எனக்கு பண தேவையே இருக்காதுன்னு சொன்னாரு
உடனே அந்த சாது தன்னோட வச்சிருந்த நாணயத்த எடுத்து அந்த ராஜாவுக்கு கொடுத்தாரு
என்னனு குழப்பமா பாத்த ராஜாவுக்கு சாது பதில் சொன்னாரு
இந்த நாணயம் கீழ கிடைச்சது இந்த நாணயத்த தேவ படுற ஒருத்தருக்கு கஷ்டப்படுற ஒருத்தருக்கு கொடுக்கணும்னு நினச்சேன்
ஆனா உங்க நாட்ல யாருமே கஷ்டப்படல சந்தோஷமாவே இருக்காங்க
நீ மட்டும்தான் உன்கிட்ட இருந்தது போதாதுன்னு அடுத்த நாட்டு மேல படையெடுக்குற
நீதான் இந்த நாட்லயே ஏழைனு சொன்னாரு
இத கேட்ட ராஜா தன்னோட தவற உணர்ந்து தன்னோட படை எடுப்ப நிறுத்துனாரு
Panchathanthira Kathaigal – கீரியும் பாம்பும் சிறுகதை – The faithful Mangoose story in Tamil
This is a panjathanthira story in Tamil with a moral about how one should not act without knowing the full story and that one must not assume the worst.
ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தாங்க , அவுங்களுக்கு அழகான கொழந்தையும் இருந்துச்சு
அவுங்க ஒருநாள் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்க அப்ப ஒரு கீரிப்பிள்ளை செத்து கிடைக்கிறத பாத்தாங்க
அதுக்கு பக்கத்துலயே ஒரு அதோட குட்டியும் கிடைக்கிறத பாத்தாங்க
இறக்க பட்ட அந்த அம்மா அந்த குட்டி கீரிய வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தாங்க
அந்த அப்பா ரொம்ப கவனமா அந்த கீரிய பாத்துக்கிட்டாரு
என்னதான் குட்டியா இருந்தாலும் அது ஒரு கட்டு விளங்குன்றாதுல அவரு உறுதியா இருந்தாரு
எப்பவும் தன்னோட குழந்தையையும் கீரியையும் பக்கத்துல வர விடமாட்டாரு
ஒருநாள் வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சியா இருந்துச்சு
வீட்டு வாசல் எல்லாம் ஒரே ரெத்தமா இருந்துச்சு , அப்பத்தான் வீட்டுக்குள்ள இருந்து ரெத்தம் வலியுறு வாயோட கீரி வந்துச்சு
தன்னோட குழந்தையை இந்த கீரி கொன்னுடுச்சுன்னு நினச்ச அந்த அப்பா அந்த கீரிய குச்சியால அடிச்சி கொன்னுட்டாரு
அதுக்கு அப்புறமா உள்ள குழந்தை அழகுற சத்தம் கேட்டுச்சு உள்ள போயி பாத்தா அந்த குழந்தையை கடிக்க ஒரு பாம்பு வந்திருக்கு
அந்த பாம்ப தான் அந்த கீரி கொன்னுருக்குன்ற உண்மை அவருக்கு தெரிஞ்சது
Panchathanthira Kathaigal – முட்டாள் அரசன் – Advice from Old People in Tamil
This is a panjathanthira story in Tamil with a moral about how one should not act without knowing the full story and that one must not assume the worst.
ஒரு நாட்ட ஒரு முட்டாள் அரசன் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு , அவனுக்கு வயசானவங்கள பாத்தாலே பிடிக்காது
அதனால 60 வயசுக்கு மேல இருக்குறவங்கள நாட்ட விட்டு தொரத்தணும்னு சட்டம் போட்டான், அப்படி நாட்ட விட்டு போகாத எல்லாரையும் தூக்கு போடணும்னும் சட்டம் போட்டான்
அங்க இருந்த ஒரு போர்வீரன் தன்னோட அப்பாவ பிரிஞ்சி இருக்க முடியாம வீட்டு குள்ளேயே ஒரு குழி தோண்டி அதுல மறச்சி வச்சான்
கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த நாட்டுல பஞ்சம் வந்துச்சு, சேமிச்சு வச்சிருந்த விதை தானியங்கள் கூட மக்களோட பசிக்கு பயன்படுத்திட்டாங்க
அதுக்கு அப்புறமா மழை வந்தப்ப கூட விவசாயம் பண்ண விதைகள் இல்லாம தவிச்சாங்க
ராஜாவுக்கும் , நாட்டு மக்களுக்கும் ஒரே குழப்பம்,
ஆலோசன கேட்க கூட ஒரு முதியவர் இல்லாம வறுத்த பாத்தாங்க
அப்பத்தான் அந்த போர்வீரன் அவுங்க அப்பாகிட்ட போயி நாட்டோட நிலைமையை சொன்னான்
அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு, ஒவ்வொரு தனியா கிடங்குக்கும் முன்னாடி இருக்குற சாலைல நீங்க உளவு போடுங்கன்னு சொன்னாரு
அப்படியா அந்த போர் வீரன் செஞ்சான் மழைத்தண்ணி பட்டு அந்த உளவுசெஞ்ச இடத்துல இல்லாம பயிர் முளைக்க ஆரம்பிச்சது
அந்த இளம் பயிர்கள எடுத்துட்டு வந்து வயல்ல விதைக்க ஆரம்பிச்சான்
இந்த விஷயம் கேள்விப்பட்ட அரசர் நேராவே வந்து இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்டாரு
அப்பத்தான் தன்னோட அப்பாவ பத்தி சொல்லி, அவர வெளிய கூட்டிட்டு வந்தான்
தன்னோட தவறுக்கு வருத்தம் தெரிவிச்ச அந்த அரசன் உங்களுக்கு எப்படி ரோட உழுதா அதுல பயிர் விளையும்னு தெரிஞ்சதுனு கேட்டான்
அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு , ஒவ்வொரு அங்காடி , தானிய கிடங்குகள்ல பல வருசமா கொட்டுன சிந்தனை விதைகள் எல்லாம் எப்பவும் அழிஞ்சு போறது இல்ல நீர் இல்லாம கூட உயிரோடதான் இருக்கும்
அந்த இடத்தை உழுகுறப்ப நீர் மற்றும் சூரிய வெளிச்சம் பட்ட உடனே அந்த விதைகள் உயிர் பெற்று வளர ஆரம்பிக்குதுன்னு தெளிவா சொன்னாரு
மூத்தவங்களோட அறிவ நாம மதிக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாரு அந்த அரசன்
Hope you had fun reading the panchathanthira tamil kathaigal 🙂
Tags:
#panchathanthira kathaigal, #panchatantra kathaigal, #panjathanthira kathaigal, #panchathanthira kathaigal tamil, #panchathanthira kathaigal in tamil, #panchatantra kathaigal tamil, #panchathanthiram kathaigal, #Panchatantra stories in Tamil, #Panchatantra story in Tamil, #Panchatantra in Tamil, #Panchatantra short stories in Tamil, #about Panchatantra in Tamil, #Panchatantra short story in Tamil, #Panchatantra short stories in Tamil pdf, #Panchatantra stories in Tamil with moral, #very short stories of Panchatantra in Tamil