Expand All   Collapse All

The best short Comedy story in Tamil and Fairy tale story in Tamil

The ultimate collection of short Comedy story in Tamil and Fairy tale story in Tamil

When we were children, we used to read loads of jokes in Tamil. When we became slightly older, whether we were in school or in college, we used to read loads of short stories. Tamil is a very beautiful language. Your favourite one might be a comedy story in Tamil, perhaps a Tamil Fairy tale or even crime stories. Our parents, mother and father, and even grandparents told us loads of comedy stories in Tamil which made us laugh a lot. They told us many fairy tales in Tamil about angels and demons. We read crime stories in the newspaper or in books.

Funny Short Comedy Story in Tamil
Funny Short Comedy Story in Tamil

These stories in Tamil taught us about how to speak Tamil and also taught us about the different perspectives in life which we needed to grow and become mature. These short stories will be very

In this blog, we are going to go through three different types of stories in Tamil for children or kids. We are going to start with a few comedy stories in Tamil. After that we will go ahead with Fairy tales in Tamil and finally we will read Crime stories in Tamil. Happy reading

If you want your stories to be included into the website, just send your story to vivek.hariharan.1989@gmail .com with your name and I will publish it.

 

List of short Comedy stories in Tamil

In school and in college na oru back bencher. Eppome comedy pannikite irupaen! These are my most favourite short Comedy stories in Tamil. I also read many comedy stories in Tamil either in the newspaper or in comic books or in mazines. These 6 are some which I like a lot!

  1. யார் பெரிய சோம்பேறி – Who is the laziest person?
  2. தெனாலி ராமன் கதைகள் – நீர் இறைத்த திருடர்கள் – Funny Comedy Tamil story
  3. முல்லாவின் கதைகள்
  4. கழுதையால் கிடைத்த பாடம் – Donkey comedy story in Tamil
  5. ஒரு பெருமிதமுள்ள பயணி!
  6. விவசாயியும் கிணறும்! – Funny Short Comedy Story in Tamil

 

List of short Fairy tale story in Tamil

These are my most favourite short Fairy tale story in Tamil. I grew up reading many fairy tales in Tamil and in English and these 6 are probably the ones which I will remember forever.

  1. ஓநாயும் சிகப்பு முக்காடு பெண்ணும் – Little red riding hood
  2. அரக்கியும் தங்க கூந்தல் பெண்ணும் – Rapunzel story in Tamil
  3. கடல் கன்னி குழந்தை கதைகள் – Little Mermaid Story in Tamil
  4. நண்டு, கொக்கைக் கொன்ற கதை – A Tamil fairy tale story of the crane and the crab
  5. விவசாயியின் கழுதை – A Tamil fairy tale story of the farmer, the son and the donkey
  6. நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை – A Tamil fairy tale story of the fox and the goat

 

Funny Short Comedy Story in Tamil – யார் பெரிய சோம்பேறி – Who is the laziest person?

This is a very funny comedy story in Tamil. There is a competiton to show who is the laziest man. Lots of people participate and show how lazy they are. Who will win???? Let us now read this short comedy story in Tamil for kids.

யார் பெரிய சோம்பேறி
யார் பெரிய சோம்பேறி

ஒரு ஊரில் திடீர் என்று ஒரு அறிவுப்பு வந்தது ஊரில் யார் பெரிய சோம்பேறிேயோ அவருக்கு 1 லட்சம் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஒரு லட்சம் என்றதும் பக்கத்து ஊரில் இருந்த சோம்பேறிகள் அனைவரும் அறிவிப்பு வந்த அரங்கத்தை நோக்கி சென்றுவிட்டனர்.

அரங்க மேடையில் இருந்து ஒருவர் வந்து அனைவருக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு அனைவரையும் பார்த்து ஊரில் இத்தனை சோம்பேறிகள் இருக்கின்றீர்கள் உங்களில் யார் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள் கலந்து கொல்பவர்கள் கையை மேலே உயர்த்தி காட்டுங்கள் என்றார்.

அரங்கத்தில் ஒரே சலசலப்புடன் அனைவரும் ஒவ்வொருவராக கையை உயர்தினார்கள். மேடையில் இருந்தவர் அனைவரையும் பார்த்து கொண்டே வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் அவருக்கு எதுவும் கேட்காதது போல அமர்ந்து இருந்தார்.

அவரை பார்த்தவுடன் கூட்டத்தில் ஒரே நிசப்தம் நிலவியது, அவரை நோக்கி மேடையில் இருந்தவர் இறங்கி வந்தார்.

வந்தவர் அமர்ந்திருந்தவரிடம் நீங்கள் மட்டும் ஏன் கையை உயர்த்த வில்லை, உங்களுக்கு பரிசு வேண்டாமா என கேட்டார்.

அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க எதுக்கு கஷ்டபட்டு கையதூக்கி எனர்ஜிய கெடுக்கனும் அதலால்தான் கைய தூக்கல அப்படின்னு சொன்னாரு.

உடனே கூட்டத்துல ஒரே அமைதி நடுவர் இவர்தான் இந்த இடத்துலயே மிக பெரிய சோம்பேறி அப்படின்னு சொல்லி ஒரு லட்சம் பணத்த தூக்கி அவர் கையில கொடுத்துட்டாரு

 

More siruvar kathaigal for kids

Links
Motivational Tamil siru kathaigal
Short Moral stories in Tamil for kids
Short panchathanthira kathaigal in Tamil
Tenali raman kathaigal

 

Funny Short Comedy Story in Tamil – கழுதையின் கதை

This is another comedy story in Tamil about the mulla. There is a person (Mulla’s friend) who wants to borrow his donkey. Mulla does not want to give away his donkey and so he uses his wits and intelligence. Let us now read this short comedy story in Tamil for kids.

Mulla Donkey comedy story in Tamil
Mulla Donkey comedy story in Tamil

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

“வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், “அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, “நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!” என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

 

Funny Short Comedy Story in Tamil – தெனாலி ராமன் கதைகள் – Mullah’s Tales

This is a very funny comedy story in Tamil about a Mulah. There was a boy was working in Mulla’s house and Mulla purchased a new pot one day. He then makes a lot of comedy with it but also teaches a valuable lesson.

Short Comedy Story in Tamil - Mulla comedy
Short Comedy Story in Tamil – Mulla comedy

முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார்.

“பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா”  எனக் கூறினார்.

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான்.

முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.

பையன் திரும்பி வந்து, ” என்ன எஜமானே” என்று கேட்டான்.

இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார்.

பையன் திடுக்கிட்டுத் திரும்பி, ” எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு முல்லா, ” பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?” என்று பதிலளித்தார்.

 

Funny Short Comedy Story in Tamil – கழுதை

This is a very funny comedy story in Tamil. There are some thieves who try to steal from the famous Tenali Raman. Tenali Raman is a very intelligent and funny man he plays a prank on them and they fall for his comedy trick. Let us now read this short comedy story in Tamil for kids.

Funny Short Comedy Story in Tamil - கழுதை
Funny Short Comedy Story in Tamil – கழுதை

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.

“முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் ” என்றார் நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.

அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார். நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.

நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.

“முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே” என்ற நண்பர் வியப்புடன் கேட்டார். முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது.

“நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் ” என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

 

Funny Short Comedy Story in Tamil – ஒரு பெருமிதமுள்ள பயணி!

INDHA KADHAI is a very funny comedy story in Tamil and will definitely be suiting many of us or our student friends from school and college … especially konjam peru rumba overah pesuvanga la….. This story is about a young man who likes to boast a lot. This funny comedy story in Tamil is about a traveller who boasts too much and finally gets caught because of his lies.

ஒரு பெருமிதமுள்ள பயணி!
ஒரு பெருமிதமுள்ள பயணி!

ஒரு பெருமிதமுள்ள பயணி, தனது பயணத்தை முடித்த பின் தான் செய்த சாகச விஷயங்களைப் பற்றியும், பார்த்த இடங்களைப் பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அச்சமயம் தான் ஒரு பெரிய பாலத்தை ஒரே பாய்ச்சலில் தாண்டி குதித்தாகப் பெரிதாக ஜம்பம் காட்டிப் பேசினார்.

அவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஒரு துடிப்பான இளைஞன், அங்கு இருந்த ஒரு பாலத்தைக் காட்டி, பயணத்தில் செய்த சாகசத்தை இங்கும் செய்து காட்டுமாறு கேட்டான். அதைக்கேட்டு அந்தப் பயணி, வியர்த்துக் கொட்ட நின்றுகொண்டு விழித்தார்.

 

 

விவசாயியும் கிணறும்! – Funny Short Comedy Story in Tamil

Ippo namma vera type of comedy story padikalaam. This is a Tamil comedy stories for kids with moral!!! This story is about the great and funny Birbal. A man tries to cheat everyone and in the end he is taught a lesson by the great Birbal in a very funny way. This Comedy story in Tamil is about Birbal teaching a cheating man a lesson in a very funny way.

My most favourite fairy tale story in Tamil
My most favourite fairy tale story in Tamil

ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.அச்சமயம் ஒரு தந்திரமான விவசாயிடம் இருந்து கிணற்றை விலைக்கு வாங்கினார். பின் அந்தத் தந்திரமான நபர், அந்த விவசாயியைக் கிணற்றில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார்.விவசாயி,” ஏன் நீர் எடுக்கக்கூடாது?” என்று கேட்டதற்கு, “நான் உனக்கு கிணற்றை தான் விற்றேன். நீரை அல்ல!”என்று கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்றார்.

இதை குறித்து விவசாயி, அக்பர் அரசின் மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கிய ‘நீதியரசர் பீர்பால்’ அமைச்சராக இருக்கும் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை நன்கு கேட்டறிந்த பீர்பால் வழக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.

அச்சமயம் இருவரின் வாதத்தையும் கேட்டுவிட்டு, பீர்பால்,” தந்திரமான விவசாயி கூறுவது நியாயம்தான்.” என்று கூறி,ஒரு நிபந்தை இட்டார். “கிணறு விற்கப்பட்டது; ஆனால் நீர் விற்கப்படவில்லை; ஆகையால், நீங்கள் கிணற்றில் இருக்கும் நீரை இன்றே அகற்றிவிட வேண்டும்; இல்லையேல் நீர் அவருக்கே சொந்தமாகிவிடும்.” என்று அந்த நிபந்தனையே தீர்ப்பாக வாசித்தார்.

அந்த தந்திரமான விவசாயியும், தன் தவறை உணர்ந்து விவசாயி நண்பரிடம் மன்னிப்பு கேட்டார்.

 

ஓநாயும் சிகப்பு முக்காடு பெண்ணும் – My most favourite fairy tale story in Tamil

We all would have definitely read or seen a youtube video of the fairy tale called as “The little red riding hood”! It is originally a German short story written by the Grimm Brothers and its translations are in many languages including Tamil! Now you can read the fairy tale story of “The Little Red Riding Hood” in Tamil.

My most favourite fairy tale story in Tamil
My most favourite fairy tale story in Tamil

தங்கிட்ட யாரும் பேச மாட்டாங்கனு தனிமையில வாழ்ந்துட்டு வந்த அந்த விறகு வெட்டுபவர் ,இந்த அழகான பெண்ணோட கரிசனமான விசாரிப்ப கேட்டதும் ரொம்ப மகிழ்ந்து போனாரு

அழகிய பெண்ணே ஏன் காட்டுக்குள்ள தனியா போறேன்னு கேட்டாரு அந்த விறகு வெட்டி ,அதுக்கு அவ சொன்னா நான் என்னோட பாட்டி வீட்டுக்கு போறேன்னு ,

இத ஒரு ஓநாய் ஒளிஞ்சிருந்து கேட்டுகிட்டே இருந்துச்சு ,திடீர்னு ஒரு யோசன தோணுச்சு அந்த ஓநாய்க்கு ,

உடனே வேகமா ஓடிப்போய் அந்த பாப்பாவோட பாட்டிய அப்படியே முழிங்கிடுச்சு. அந்த பாட்டியோட கண்ணாடி ,டிரஸ் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு பாப்பாவுக்காக காத்துட்டு இருந்துச்சு

அங்க வந்த பாப்பா தன்னோட பாட்டியோட உருவத்துல ஏதோ வித்தியாசம் இருக்கேன்ன்னு பாட்டி ஏன் உங்க கண்கள் பெருசா மாறிடுச்சுன்னு கேட்டா

அதுக்கு அந்த ஓநாய் சொல்லுது அதுவா உன்ன நல்லா பாக்குறதுக்குனு சொல்லுச்சு. பாட்டி ஏன் உங்க கைகள் ஏன் பெருசா மாறிடுச்சுன்னு திரும்பவும் கேட்டா அந்த பாப்பா

அதுக்கு அந்த ஓநாய் சொல்லுது அதுவா உன்ன நல்லா தூக்கி கொஞ்சுறதுக்குனு சொல்லுச்சு. அடுத்து இது என்ன உங்க பல் எல்லாம் பெருசா மாறிடுச்சுனு கேட்டா அந்த பாப்பா

உடனே அவகிட்ட வந்த அந்த ஓநாய் உன்ன அப்படியே முழுங்குறதுக்குன்னு சொல்லிட்டு அவள பிடிக்க போச்சு

உடனே பயந்துபோன அந்த பாப்பா சத்தமா கத்த ஆரம்பிச்சா ,இந்த சத்தம் கேட்ட அந்த விறகு வெட்டுபவர் வேகமா ஓடி வந்தாரு

வீட்டுக்குள்ள நடக்கிறத தெரிஞ்சிகிட்ட அவரு கோடரிய எடுத்து அந்த ஓநாயோட தலையில ஒரு அடி அடிச்சாரு. டக்குனு தன்னோட வாயில இருந்த அவுங்க பாட்டிய துப்பிட்டி ஓடி போய்டுச்சு அந்த ஓநாய்

குழந்தைகளா நீங்களும் இந்த பாப்பா மாதிரி அடுத்தவங்கள மரியாதையாவும் ,அன்போடவும் அணுகுனீங்கன்னா எல்லாரும் உங்களுக்கு உதவி செய்வாங்க .

 

Little Mermaid fairy tale story in Tamilகடல் கன்னி குழந்தை கதைகள்

When we were in school, we would have definitely seen the legendary cartoon movie made by Disney movie called as “The little mermaid”! Many people consider it as one of the best Disney movies of all time! Now you can read the story of “The Little Mermaid” in Tamil. In this beautiful story, the main characters are a handsome prince and a princess who is a mermaid. Let us now start reading this famous fairy tale in Tamil!

Little Mermaid fairy tale story in Tamil
Little Mermaid fairy tale story in Tamil

ஒரு காலத்துல ஒரு சமுத்திர ராஜ்ஜியம் இருந்துச்சு ,அது கடலுக்கு அடியில இருக்குற ஒரு கடற்கன்னிகளின் சாம்ராஜ்யம்

அந்த சாம்ராஜ்யத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சிட்டு வந்தாரு ,அவருக்கு ஐந்து மகள்கள் இருந்தாங்க ,அவுங்க எல்லாரும் அழகிய மீன் வாலோட ரொம்ப அழகா இருந்தாங்க ,இருந்தாலும் கடைசி கடற்கன்னி மட்டும் ரொம்ப அழகாவும் ரொம்ப புத்திசாலியாவும் இருந்தா

ஒருநாள் அவுங்க பாட்டி அவள கூப்பிட்டு உனக்கு வயசு நிறைய ஆகிடுச்சு ,நீ சில உண்மைகளை தெரிச்சிக்கிடனும் ,நம்மை போலவே உருவம் உடைய மனிதர்கள் நிறையபேர் இந்த உலகத்துல இருக்காங்க ,அவுங்களுக்கு நம்ம போல வால் இல்லாம கால் இருக்கும் ,அவுங்களால நம்மள போல அதிக நேரம் தண்ணீல இருக்க முடியாது.

உனக்கு சரியான வயசு வந்ததால உனக்கு கடல விட்டு வெளிய போய் அவுங்கள பாக்குற அனுமதி கொடுக்குறேன்னு சொன்னாங்க.

உடனே கடல் மட்டத்துக்கு வந்த அந்த குட்டி கடற்கன்னி ஒரு பாறைல உக்காந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சா

அப்ப அந்த பக்கமா ஒரு இளவரசரோட கப்பல் வந்துச்சு ,அந்த கப்பல்ல இருந்த அந்த இளவரசர பாத்து அவரோட நட்பு வச்சுக்கிடணும்னு நினச்சா அந்த கடற்கன்னி

அப்ப திடீர்கு சூறாவளி அடிக்க ஆரம்பிச்சுச்சு ,உடனே அந்த கப்பல் முழுக ஆரம்பிச்சது ,அந்த கப்பல்ல இருந்த எல்லாரும் மூழ்க ஆரம்பிச்சாங்க

உடனே அந்த சிறிய கடற்கன்னி தண்ணில குதிச்சி அந்த இளவரசர காப்பாத்துனா.மயக்கத்துல இருக்குற இளவரசர கரைல போட்டுட்டு தண்ணிக்குள்ள போய் நின்னு பாத்தா

அப்ப அங்க வந்த வேற நாட்டோட கப்பல்ல இருந்து ஒரு இளவரசி இறங்கி அவனை எழுப்பி ,என்னாச்சுன்னு கேட்டா

என்ன நீங்கதான்காப்பதுனீங்க அப்படின்னு சொல்லி அவளுக்கு நன்றி சொன்னா ,அந்த இளவரசியும் அவனை தன்னோட கப்பலுக்கு கூட்டிட்டு போனா

கடலுக்கு வந்த கடற்கன்னி நான் காப்பாத்துன அந்த இளவரசர வேற ஒரு பெண் கூட பாக்க கஷ்டமா இருக்குன்னு நினைச்சு வறுத்த பட்டா

அப்ப அங்க வந்த சூனியக்காரி ,ஏய் பெண்ணே நீ கடல விட்டு போனா உனக்கு கால் வர்ற மாதிறி இந்த மந்திர நீர் இருக்கு ,இத நீ குடிச்சான்னா மனிதர்கள் போல மாறலாம்னு சொன்னா

அத கேட்ட இளைய கடற்கன்னி அவசரப்பட்டு அத எடுத்து குடிச்சா. வெளிய வந்த அவளுக்கு வால் போயி கால் வந்துச்சு ,கடல் எல்லைக்கு வந்த அவ அந்த இளவரசியோட கப்பலுக்கு போனா

அங்க அந்த இளவரசிக்கும் இளவரசருக்கு கல்யாணம் நடந்துகிட்டு இருந்துச்சு, இத பாத்த கடற்கன்னிக்கு ரொம்ப வருத்தமா போச்சு. அப்ப அங்க வந்த கடற்கன்னியோட உடன் பிறந்த கடற்கன்னிகள் அங்க வந்தாங்க

தங்கையே நீ செஞ்சது தவறு.சுயநமாலம் கொண்ட மனிதர்களை எப்போதும் நம்ப கூடாது .அவங்கள காப்பாத்துன உன்ன விட்டுட்டு வேரோடு பெண்கூட கல்யாணம் செய்ற அவனை நம்பாத.

ஒரு மனிதனுக்கு ஆச பட்டு உன்ன மதிக்கிட்டது பெரிய தவறு . இருந்தாலும் உனக்கு மீண்டும் கடற்கன்னியா மாற வாய்ப்பு இருக்கு இந்த கத்திய எடுத்துட்டு போய் அந்த இளவரசன குத்துன்னு சொல்லி கத்திய கொடுத்தாங்க

கப்பலுக்கு திரும்ப வந்த அந்த கடற்கன்னியை அடையாளம் தெரிஞ்சுக்கிட்ட அந்த புது இளவரசி ,அடடா அழகிய பெண்ணே நீ தான இந்த இளவரசரை அன்னைக்கு காப்பாத்துன உன்ன தேடி தேடி பார்த்தேன்னு சொல்லி அவளை வரவேற்றா

இளவரசர் கிட்டயும் அவளை அறிமுக படுத்துனா ,அன்னைக்கு உங்கள தண்ணீல இருந்து காப்பாத்துனது இந்த பெண்தான்னு சொன்னா

இத கேட்ட கடற்கன்னிக்கு இந்த மனிதர்களடயும் உண்மை நல்ல குணங்கள் இருக்கு ,நமக்கு கிடைக்காத இந்த இளவரசர இந்த இளவரசி கல்யாணம் செஞ்சா பரவா இல்லைனு நினச்சு

கத்திய கீழ போட்டுட்டு கடல் சாம்ராஜ்யத்துக்கு வந்தா ,அவள பாத்த கடல் அரசர் கனிவான மனம் கொண்ட நீ மனிதர்கள் உன்னை மறந்த போதிலும் அவர்களுக்கு நல்லது செய்ய உன்னோட உயிரையே கொடுக்க துணிஞ்ச உன்ன பாராட்டுறேன்னு சொல்லி அவள மீண்டும் கடல் கன்னியாவே மாத்தி வாழ்த்து சொன்னாரு கடல் அரசர்

 

அரக்கியும் தங்க கூந்தல் பெண்ணும் – Rapunzel fairy tale story in Tamil

When I was a school student, I saw the famous Disney movie called Rapunzel! This was among my most favourite Disney short fairy tales and now you can read it in Tamil. In this beautiful story, the main characters are a princess, a prince and a witch. Let us now start reading this super duper famous Tamil fairy tale and fall in love with Rapunzel!

Rapunzel fairy tale story in Tamil
Rapunzel fairy tale story in Tamil

ஒரு மாய உலகத்துல ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க. அவுங்களுக்கு குழந்தை இல்லாததுனால தங்களுக்கு குழந்தை வேணும்னு வேண்டிகிட்டே இருந்தாங்க ,

அவுங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரக்கியோட அரண்மனை இருந்துச்சு. தங்களோட வீட்டுல இருந்து பாத்தா அந்த அரக்கியோட பூ தோட்டம் அவுங்களுக்கு தெரிஞ்சது ,ஒருநாள் அந்த பூ தோட்டத்துல இருந்து ஒரு பூ வேணும்னு அந்த மனைவி ஆசைப்பட்டு கேட்டாங்க

அத கேட்ட அந்த கணவன் தன்னோட மனைவியோட அசைய நிறைவேத்த ,அந்த அரக்கியோட தோட்டத்துக்கு போயி ஒரு பூவ பிடிக்கிண்டு வந்து கொடுத்தாரு

இத தெரிஞ்சிகிட்ட அரக்கி ரொம்ப கோபமானா ,அது எப்படி என்னோட தோட்டத்துல இருந்து பூ பிடுங்கலாம்னு. அந்த கணவன் மனைவி வசிக்கிற இடத்துக்கு வந்து சண்ட போட்டா அந்த அரக்கி

அப்ப அந்த அரக்கி சொன்னா என்னோட பூந்தோட்டத்துல இருக்குற பூ எல்லாம் எனக்கு குழந்தைகள் மாதிரி அத நீங்க எடுத்துட்டு வந்ததால உங்களுக்கு குழந்தை பெறந்துச்சுன்னா அத நான் எடுத்துட்டு போய்டுவேன்னு சொல்லிட்டு போய்ட்டா

பயந்து போன கணவனும் மனைவியும் பயந்துகிட்டே வாழ்க்கைய ஓட்டுனாங்க,கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அவுங்களுக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்துச்சு

அந்த குழந்தை பிறந்த உடனே பாத்தா அந்த குழந்தைக்கு அழகான தங்கநிற கூந்தல் இருந்துச்சு. அன்னைக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு அங்க வந்த அந்த அரக்கி குழந்தையை தூக்கிட்டு போய்ட்டா

குழந்தையை கொண்டு போய் தன்னோட அரண்மனையோட மாடியில போய் அடைச்சு வச்சுட்டா. கொஞ்ச காலத்துல அந்த குழந்தை வளர்ந்து பெரியவளா ஆனா ,அவளோட தங்க நிற தூந்தலும் ரொம்ப பெருசா வளர்ந்துடுச்சு

அரக்கி எப்ப எல்லாம் மாடிக்கு போகணும்னு தோணுதோ அப்ப எல்லாம் கீழ இருந்து கூப்பிடுவா ,உடனே மேல இருந்து தன்னோட கூந்தல வெளிய தூக்கி போடுவா அந்த பெண்

அந்த கூந்தல பிடிச்சி மேல ஏறி மாடிக்கு வருவா அந்த அரக்கி. அந்த பெண் மடியில அடச்சி வச்சதால அவள யாராலயும் பாக்க முடியாது ,அவளோட பொழுதுபோக்கே பாட்டு பாடிகிட்டே இருக்குறது தான்

ஒரு நாள் அந்த பக்கமா வந்த இளவரசர் ஒருத்தன் அந்த பாட்ட கேட்டான் ,யார் இவ்வளவு அழகா படுறதுன்னு தேடி பாத்தான்.

அப்பத்தான் அந்த அரக்கியோட அரண்மனை அவன் கண்ணுக்கு தெரிந்தாச்சு ,அப்ப அந்த அரக்கி மாடிக்கு கூந்தலை பிடிச்சு ஏறி போறதையும் பாத்தா ,

அப்பத்தான் அந்த பெண்ணோட நிலைம அவனுக்கு புரிஞ்சது . கொஞ்ச நாளுக்கு அப்புறமா அங்க வந்த இளவரசன் ,அந்த பெண்கிட்ட வந்து தன்னை மேல வர அனுமதிக்க சொல்லி கேட்டான்.

அரக்கி இல்லாததால அவளும் கூந்தலை வெளிய எடுத்து போட்டா ,அத பிடிச்சி மேல வந்த இளவரசர் அந்த பெண்ணோட கதையை கேட்டு ரொம்ப வறுத்த பட்டான் ,உன்ன நான் நாளைக்கு வந்து காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மீண்டும் கூந்தலை பிடிச்சி இறங்க ஆரம்பிச்சான்

இந்த காட்சிய தூரத்துல இருந்து பாத்தா அரக்கி ,அவளுக்கு ரொம்ப கோபமா வந்துச்சு ,மாடிக்கு வந்த அரக்கி அவளோட கூந்தல கத்திரிக்கோல் எடுத்துட்டு வந்து வெட்டிவிட்டா .

இனிமே நீ எனக்கு வேணாம்னு சொல்லி பாலைவனத்துல கொண்டு போய் விட்டுட்டா அவள. மறுநாள் வந்த இளவரன் வந்து கூந்தல்ல ஏறுனா அவனை கொள்ளலாம்னு நினச்சு கூந்தலை அப்படியே தொங்க விட்டுட்டு காத்திருந்தா அரக்கி.

அங்க வந்த இளவரசன் இது எதுவுமே தெரியாம கூந்தல பிடிச்சி மேல ஏற ஆரம்பிச்சான் ,அவன் மேல வந்ததும் கூந்தல வெட்டி விட்டா அரக்கி. மேல இருந்து கீழ விழுந்த இளவரசனுக்கு கண்ல அடிபட்டு கண்பார்வை போய்டுச்சு

அதுக்கு அப்புறமா மெதுவா நடக்க ஆரம்பிச்சான் இளவரசன் ,கண்தெரியாம ரொம்ப தூரம் நடந்த அந்த இளவரசன் அப்படியே பாலைவனம் பக்கமா போனான்

அப்ப அங்க இருந்த அந்த தங்க கூந்தல் பெண் அவன பாத்து வருத்தப்பட்டா ,எனக்கு உதவி செய்ய வந்து இப்படி ஆகிடுச்சேன்னு வறுத்த பட்டா அந்த அரக்கி

மெதுவா அந்த இளவரசனோட கைய தோட்டா ,அவன் கைய தோட்ட உடனே அந்த இளவரசனுக்கு தன்னோட கண் மெதுவா தெரிய ஆரம்பிச்சது

கண் பார்வை மீண்டும் கிடைச்ச அரசன் தன்னோட அரண்மனைக்கு அவளை கூட்டிட்டு போய் சந்தோசமா வாழ ஆரம்பிச்சான் கொஞ்ச நாளுக்கு அப்புறமா அவளுக்கு அவள மாதிரியே ஒரு அழகான பெண் குழந்தை பெறந்துச்சு ,அவளுக்கும் அழகான கூந்தல் இருக்குறத பாத்து எல்லாரும் சந்தோச பட்டாங்க

 

நண்டு, கொக்கைக் கொன்ற கதை – A fairy tale story in Tamil about a crane and the crab

This is among my most favourite short fairy tale story in Tamil and it is from the Panchatantra collection. In this wonderful kathai, a crane tricks and eats many fish by lying to them. He then tries to trick a crab who understands what is going on and uses his intelligence to escape and teach the crane a lesson. Let us now start reading this Tamil fairy tale and enjoy it.

the crane and the crab
the crane and the crab

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

 

A fairy tale about a farmer, his son and a donkey

Now on to 5th fairy tale story in Tamil. In this short fairy tale, a farmer and his son were taking a donkey to the market. On the way they encounter many people who give them different advice which they listen without thinking. You will love this Tamil fairy tale story without a doubt!

A farmer, his son and a donkey
a farmer, his son and a donkey

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு, அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு, உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.

தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி, அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு, கழுதை சும்மாதான நடத்துவது, உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு

உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு, அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு

உடனே விவசாயி சரினு தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு,

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம், ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .

உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு,

அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு

உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு, இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க, இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு, ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க,

அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு, ஆத்த கடக்கறப்ப கழுத்த பயத்துல துள்ளி குதிச்சது, உடனே பிடிய விட்டான் அந்த பையன், அப்ப அந்த கழுத்த ஆத்தோட போயிருச்சு

அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு, கழுதையும் போயிருச்சு, அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு

 

நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை – A fairy tale story in Tamil about a fox and a goat

We are done with 11 stories now. 6 were comedy stories in Tamil and 5 were fairy tale stories in Tamil. The 12th story is a fairy tale story in Tamil about a fox and a goat. In this fairy tale, a fox gets stuck in a well and has to find a way to escape. See how he uses his intelligence and wits to escape from the well!

A fairy tale story in Tamil about a fox and a goat
A fairy tale story in Tamil about a fox and a goat

ஒரு நாள் ஒரு நரி பாலைவனத்துக்கு போச்சு, அங்க ரொம்ப வெயில் அடிச்சதால அந்த நரி ரொம்ப சோர்வகிடுச்சு

ரொம்ப தாகம் எடுத்த அந்த நரி எதாவது தண்ணி தர்ற கிணறு, குளம் இருக்கானு பாத்துகிட்டே போச்சு

அப்பத்தான் அங்க ஒரு கிணறு இருக்குறத பாத்துச்சு, உடனே ரொம்ப சந்தோஷமான அந்த நரி அந்த கிணத்துமேல ஏறி தண்ணி இருக்கான்னு பாத்துச்சு

அப்ப திடீர்னு கால் வழுக்கி தண்ணிக்குள்ள விழுந்துச்சு அந்த நரி, எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல

காப்பாத்துங்க, காப்பாத்துங்கனு கத்திகிட்டே இருந்துச்சு அந்த நரி, அந்த பக்கம் யாருமே இல்லதுனால ரொம்ப நேரம் அந்த நரி கத்திகிட்டே இருந்துச்சு

அப்பத்தான் ஒரு ஆடு அந்த பக்கமா வந்துச்சு, கிணத்துக்குள்ள இருந்து சத்தம் வராத கேட்ட அந்த ஆடு மெதுவா எட்டி பாத்துச்சு

அடடா நரியாரே கிணத்துக்குள்ள என்ன பன்றிங்கன்னு கேட்டுச்சு

அப்பத்தான் நரிக்கு ஒரு யோசனை வந்துச்சு, நம்மள யாரும் மேல இருந்து காப்பாத்த முடியாது, யாராவது உள்ள குதிச்சுதான் காப்பாத்த முடியும்

ஆனா தன்னோட உயிர பணயம் வச்சு யாரும் தன்ன காப்பாத்த கிணத்துக்குள்ள குதிக்க மாட்டாங்க அப்படிங்கிற உண்மையும் புரிஞ்சுச்சு

நமக்குன்னு கிடைச்ச இந்த ஆட்ட ஏமாத்துறத தவிர வேற வழி இல்லைனு முடிவு பண்ணுன அந்த நரி, ஆடு கிட்ட சொல்லுச்சு இங்க நிறைய நல்ல தண்ணி இருக்கு ரொம்ப குளிர்ச்சியவும் இருக்கு அதான் ரொம்ப சந்தோஷத்துல கத்திடேன்னு சொல்லுச்சு

அவ்வளவு நல்ல தண்ணியா இருக்குன்னு கேட்டுச்சு அந்த ஆடு, ஆமாம் ஆடாரே நீங்க வேணும்னா உள்ள வந்து பாருங்கன்னு சொல்லுச்சு

முட்டாளான அந்த ஆடு யோசிக்காம உள்ள குதிச்சது, உடனே அந்த ஆடு அந்த தண்ணிய குடிச்சு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு

நரியாரே நீங்க சொன்ன மாதிரி இது ரொம்ப சுவையான நீரை இருக்குன்னு சொல்லுச்சு, ஆமா இப்ப நாம எப்படி வெளிய போகப்போறோம்பு கேட்டுச்சு

அதுக்கு அந்த நரி நாந்தான் இருக்கேன்ல நீ என்மேல ஏறி வெளிய போயிடுனு சொல்லுச்சு ஆடும் அதுக்கு சரின்னு சொல்லுச்சு,

ஆனா முதல்ல நான் உன்மேலே ஏறி வெளிய போறேன் அடுத்து நீ என்மேல ஏறி வெளிய வான்னு சொல்லுச்சு

நரியோட பேச்சுல இருக்குற சூத அறியாத அந்த முட்டாள் ஆடும் நரி வெளிய போக குனிஞ்சு நின்னுச்சு, உடனே அந்த நரி அந்த ஆடு மேல ஏறி வெளிய போயிடுச்சு

நரியாரே இப்ப என்ன வெளிய எடுங்கன்னு சொல்லுச்சு, நான் உள்ள இல்லாதப்ப என்னால எப்படி உனக்கு குனிய முடியும் முட்டாள் ஆடேன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு அந்த நரி

நரியால ஏமாத்த பட்ட அந்த ஆடு அடடா அந்த நரி சொன்னத அப்படியே நம்பி இப்படி ஏமாந்துட்டமேன்னு சொல்லி வறுத்த பட்டு அழுத்துச்சு அந்த ஆடு

 

ஒரு துப்பறியும் கதை – Crime story in Tamil

We have read many comedy stories in Tamil and fairy tale stories in Tamil. Let us now try reading a nice crime story in Tamil about a detective who is trying to solve a murder.

ஒரு துப்பறியும் கதை - crime story in Tamil
ஒரு துப்பறியும் கதை – crime story in Tamil

அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர் இறந்துவிட்டார். ஆனால், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. துப்பறியும் புலி செல்வா அந்த இடத்தில ஆஜர்.

“இவருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?”, “நீங்கள் யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா?”,”உங்கள் சந்தேகம் என்ன?” போன்ற பல கேள்விகளுக்கு உறவினர்களின் பதில் “தெரியாது”,”இல்லை”, “எனக்குத் தெரிந்து இல்லை” போன்ற பதில்களே.

சோர்ந்து போன செல்வாவுக்கு புத்துணர்வு கொடுத்தது அந்த தகவல். இறந்தவர் ஒரு மாதத்துக்கு முன் தன குடும்ப டாக்டரைப் பார்த்திருக்கிறார். ஆனால் அன்று முதல் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார்.

தகவல் கிடைத்ததும் குடும்ப டாக்டரைச் சந்தித்தார், செல்வா. “நான் ஒன்னும் பெரிய ரகசியத்தை அவருக்கு சொல்லலையே!”, மோவாயைத் தடவிய படி டாக்டர் மேலும் சொன்னது, “சார், அவர் உடல் நிலை நல்லாத்தான் இருந்தது, கொழுப்பு, சர்க்கரை பி.பி. எதுவும் கிடையாது. ஆனா, அவருக்கு உப்பு வியாதி இருந்தது, எக்காரணம் கொண்டும் உப்பு போட்டு சாப்பிடக் கூடாது, அது மட்டுமில்லை, கொஞ்சம் உப்பு சாப்பிட்டு வந்தாக் கூட ஒரே மாசத்துல இறந்துடுவார்னு அவர் கிட்ட எச்சரிச்சிருந்தேன்”

“அப்போ, அவருக்கு சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா உப்பு சேர்த்துப் போட்டிருந்தா, ஒரே மாசத்தில் அவர் இறந்திருக்கக் கூடுமா?” கேட்ட செல்வாவுக்கு ஒரு “எஸ்” சொன்னார் சோகமாய்.

பிடி கிடைத்த சந்தோஷத்தில் அந்த வீட்டு சமையல்காரனை விசாரித்தார். “ஐயோ, எஜமானை நான் போய் கொல்லுவேனா? அவர் உப்பை சாப்பிட்டு நான் வளர்ந்திருக்கேன் சார், இன்னும் சொல்லப் போனா, டாக்டர் சொன்ன விஷயத்தை என்கிட்டே சொல்லி, தானே கேட்டாலும் உப்பு போடக் கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வேற வாங்கி வச்சிருந்தார், தெரியுமா?” என்றபடியே பிலாக்கணம் பாட ஆரம்பித்தான் அவன்.

நொந்தபடியே வீட்டில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த செல்வாவை ஒரு இடி இடித்தாள்   அவர் மனைவி. “என்னங்க இது, காலையிலிருந்து பல்லு கூட விளக்காம அப்படி என்ன யோசனை? அந்தப் பணக்காரர் எப்படி செத்தா என்ன? செத்தவர் செத்துட்டார், விடுவீங்களா?” கேட்டுக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தார் அவர். திடீரென அவருக்கு ஒரு யோசனை, “கரெக்ட், அதுதான் சரி” என்றபடியே அந்த பணக்காரரின் வீட்டுக்குப் போனார் செல்வா.

“அந்த பணக்காரர் எப்படி செத்தாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்.” என்றார் செல்வா. “அப்படியா? யாரு கொலை பண்ணினாங்க?” ஆர்வமாய்க் கேட்ட மனைவியிடம், “யாரும் கொலை பண்ணலை, அவர் இயற்கையாத் தான் செத்தார்.”

“அதுதான் எப்படி?” கேட்ட மனைவிக்கு செல்வாவின் பதில்,

“அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!”

 

Tags:

#Comedy story in Tamil, #short comedy stories in Tamil, #Tamil comedy stories for kids, #kutti Tamil Comedy story, #short comedy stories in Tamil with moral, #funny stories in Tamil, #stories in Tamil fairy tales, #princess story in Tamil fairy tales, #Fairy tale story in Tamil, #Crime story in Tamil

Leave a Reply